பிரின்ஸ் ஜூவல்லரியின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு செய்கூலி, சேதாரம் இல்லை…

கோவை பிரின்ஸ் ஜூவல்லரியின் முதலாம் ஆண்டு விழாவை இன்று(17.08.17) கொண்டாடியது. முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய கலெக்ஷன்கள் மட்டுமன்றி, சிறப்பு தள்ளுபடிகளும் துவக்கப்பட்டுள்ளன. பிரின்சஸ் மெமன்ட்ஸ் என்ற மணமகளுக்கான கலெக்ஷன்கள் இடம் பெற்றுள்ளன. புதிய கலெக்ஷன்களில் மணமகள் அலங்காரம், நெக்லஸ், வளையல்கள், தோடுகள் இடம் பெற்றுள்ளன. பழைமையான பாரம்பரியமிக்க நகைகளும் வைர நகைகளும் உள்ளன.

மேலும் சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. 1. நகை வாங்குவோரில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு தங்க நாணயங்கள் பரிசளிக்கப்படும். 2. தங்க நகை வாங்கும் தவணை திட்டத்தில், முதலாவது தவணை இலவசம். 3. செய்கூலி, சேதாரம் இல்லை. இதுமட்டுமன்றி ஒவ்வொரு நகை வாங்கும் போதும் பரிசுகளும், அன்பளிப்புகளும் உள்ளன.

முதலாமாண்டு விழாவை முன்னிட்டு “பழமையின் ரகசியம்” திருவிழாவை, திருவாங்கூர், மலபார், செட்டிநாடு வரை மறந்து போன பலவகைகளை அறிமுகம் செய்துள்ளது. பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமாக, பல இலகுரக நகைகள், கலெக்ஷன்கள் இடம் பெற்றுள்ளன.

டீ பீர் டைமன்ட் சீசன் 2007, பெஸ்ட் ஷோரூம் ஸ்டா 2008 பிளாட்டினம் கில்ட் விருதுகளை இந்த நிறுவனம் வென்றுள்ளது. 84 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமிக்க நகை விற்பனையாளர்களாக பிரின்ஸ் ஜோஸ் உள்ளது. 1933ம் ஆண்டில் கேரள மாநிலம், கோட்டயம், பொன்குன்னத்தில் இந்த நிறுவனம் துவக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக திகழும் பிரின்ஸ் ஜூவல்லர்ஸ் விரைவில் தென்னிந்திய அளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.