வித்யாரம்பம் ஆரம்பம்

இந்திய முழுவதும் தொடர் விடுமுறையால் மகிழ்ச்சி அடை மழையில் மக்கள் குறிப்பாக மாணவர்கள் நனைந்து கொண்டிருக்கின்றனர். இந்த விடுமுறையானது உழைப்பவர்களுக்கும், கல்வி கற்பவர்களுக்கும் மிக முக்கியமான நாள். அதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாட கூடிய மிக பெரிய விழா. இந்த விழா  1 நாள் 2 நாளில் முடிவது கிடையாது. இது நவராத்திரி என்று 9 நாட்கள்  கொண்டாடும் இது விழா அல்ல திருவிழா. இதன் முடிவான இன்று 10 வது நாள். இந்த நாள் இந்து வழிபாடு முறைகளில் முக்கிய சிறப்பம்சங்கள் கொண்டது.

விஜயம் என்றால் வெற்றி, தசமி என்றால் 10ஆம் நாள் என்று பொருள். இதன் அர்த்தம் 9 நாள் மகிஷாசுரனுடன் போரிட்டு 10 வது நாள் வெற்றி பெற்ற துர்க்கை அம்மணி வழிபடும் நாள் தான் இந்த விஜய தசமி. மகிஷாசுரன் என்ற வரம் வாங்கிய அரக்கனை, காளிதேவி அழித்த நாள் தான் விஜயதசமி இந்த நாளில் வாணி மரத்தை சுற்றி வளம் வருவது நன்மை தரும் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், பாண்டவர்கள் கட்டுக்குள் மறந்திருந்த பொழுது போருக்காகக தங்களது ஆயுதங்களை வன்னிமரத்தில் மறைத்து வைத்திருந்தார்கள். தேவியை வேண்டி சென்று அந்த போரில் வென்றதும்  குறிப்பிடத்தக்கது. இந்நாளில் 21 முறை வன்னி மரத்தை சுற்றி வலம்வந்தால் எண்ணியது நிறைவேறும் என்றும் சொல்லப்படுகிறது.  அதேபோல் சீதையை கடத்திவந்த ராவணனை, நவராத்திரி விரதம் இருந்து துர்கா தேவியை வழிபட்டு ராமன் கொன்றதாக சொல்லப்படுகிறது.

இந்த நாளின் மற்றுமொரு சிறப்பு கல்வி,தொழில்,கலை கற்றுகொள்வது என எதுவாக இருந்தாலும் தொடங்குவதற்கு இந்த நாள் சிறப்பானதாகும். குழ்நதைகளுக்கு கல்வி எனும் பெரும் செல்வதை பெறுவதற்கு இந்த வித்யாரம்பம் என்ற கல்வியை தொடங்குவதற்கான முதல் பள்ளி சேர்க்கை இந்த நாளில் தான் நடக்கிறது.

போராடியவன் (உழைப்பவன்) என்றுமே தோற்றது இல்லை. போராடி (உழைத்து) தோற்றவன் வெற்றிக்கு விதையிட்டவன்.  செயலை ஆரம்பத்திலிருந்து செய்வோம், முடிவுவரை செய்வோம். தீமை தான் நன்மையை வெளிக்கொண்டுவரும். அதேசமயம், நன்மை என்றுமே தீமையை வெல்லும்.