வெற்றி நல மையம் துவக்க விழா & முதியோர்களுக்கான கருத்தரங்கம்

கோவையில் வெற்றி நல மையம் துவக்க விழா மற்றும் முதியோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.           கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற வெற்றி நல மையம் என்னும் தனியார் தொண்டு நிறுவனத்தின் துவக்க விழாவும் “அனு பூதி” என்னும் முதியோர்களுக்கான கருத்தரங்கும் நடைபெற்றது.

திருப்பூரில் கடந்த ஐந்து வருடங்களாக செயல்பட்டுவரும் நல மையம், கோவையிலும் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பேச்சாளர் சுகிசிவம்,மருத்துவர்கள் நடராஜன், புவனேஸ்வரி, அபிராமி ஆகியோர் கலந்து கொண்டு முதியோர்களுக்கான உணவு முறைகள், மருத்துவ உதவிகள் குறித்து சிறப்புறை ஆற்றினார்கள்.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் கலந்து கொண்டனர்.வெற்றி நலவாழ்வு மையம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த “ராம்ராஜ் காட்டன்” நாகராஜ் கூறும் போது, ஐந்து வருடங்களாக திருப்பூரில் மிகச் சிறப்பான முறையில் எங்களது மையம் செயல்பட்டு வருகிறது, தாயின் கருவறையில் உள்ள குழந்தை முதல் அவர்களது இளமைக்காலம், கர்ப்பகாலம் மற்றும் வயதான காலம் வரை சிறப்பாக வாழ்வதற்கு ஏற்ப பயிற்சிகளை வழங்கியும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக எங்களுடைய அமைப்பை கோவையிலும் துவங்கியுள்ளோம்.

எங்களது அமைப்பு மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளையும், பயிற்சிகளையும் வழங்க உள்ளோம் என்றும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது வெற்றி நலமையத்தின் நிறுவனர் sky சுந்தர்ராஜ், தலைவர் கே பி ஆர் நடராஜ், செயலாளர் எம் கணேஷ், அறங்காவலர்கள் சென்னை சில்க்ஸ் ஆறுமுகம், விநாயகம், “சைனி” ஈஸ்வரன், இணை செயலாளர் துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.