தகவல் தொடர்பியல் துறையின் ஐடியா 2019

சி.எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கல்லூரி தகவல் தொடர்பியல் துறையின் ஐடியா 2019 நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஜி கலை கல்லூரி தகவல் தொடர்பியல் துறையின் தலைவர் ஜெய பிரகா‌ஷ்‌ கலந்து கொண்டார். கல்லூரியின் முதல்வர் ஜெமிமா வின்சென்ட், மற்றும் துறை தலைவர் விஜய குமார் ஆகியோர் முதன்மை வகித்தனர்.  நிகழ்ச்சியில் துறையின் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

துறையின் முன்றாம் மாணவன் ஹென்றி ஹில்சன் வரவேற்பு வழங்கினார். கடந்த ஆண்டிற்கான அறிக்கையை இரண்டாம் ஆண்டு மாணவி ஏஞ்ஜிலா வாசித்தார். இந்த ஆண்டிற்கான திட்டங்களை முன்றாம் ஆண்டு மாணவன் சௌ பரணி வாசித்தார்.

ஐடியா 2019 யின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்சென்ட் மூலம் பதவியேற்று கொண்டார்கள். துறை தலைவர் விஜய குமார், சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் சிறப்பு விருந்தினர் ஜெய பிரகா‌ஷ்‌ பேசுகையில், மாணவர்களுக்கு தற்கால ஊடகத்துறை பற்றியும், திரைப்பட துறையின் நிலைகளை பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார். இன்றைய சூழலில் இயற்கை வளங்கள் அழிந்து கொண்டு வருகிறது, அதனால் ஊடக துறை மாணவர்களாகிய நீங்கள் உங்கள் கவனத்தை அதன் மீது செலுத்துங்கள், என்றார். துறையின் முன்றாம் ஆண்டு மாணவன் ஆதில் அஹ்மத் நன்றியுரை வழங்கினார்.