ஸ்மார்ட் போன்களைத் தாக்கும் மால்வேர் !

உலகில் சுமார் 25 மில்லியன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களை மால்வேர் ஒன்று தாக்கியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

” ஏஜென்ட் ஸ்மித் ” எனும் மால்வேர் சர்வதேச அளவில் சுமார் 25 மில்லியன் ஸ்மார்ட் போன்களைத் தாக்கியுள்ளது. ஆய்வின் போது இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் ஸ்மார்ட் போன்களை ” ஏஜென்ட் ஸ்மித் ” மால்வேர் தாக்கியுள்ளது.

கூகுளுக்குத் தொடர்புடைய அப்ளிகேஷனாக ஸ்மார்ட் போனில் குடி இருக்கிறது இந்த மால்வேர். இது மெதுவாக போனில் உள்ள மற்ற ஆப்களைத் தாக்கத் தொடங்குகிறது. இது ஆண்ட்ராய்டு உபயோகிப்பவர்களுக்கேத் தெரியாமல் இந்த தாக்குதல் நடைபெறுகிறது.

சைபர் க்ரைம் துறை கடந்த ஜூன் மாதத்தில் ஆபத்தை விளைவிக்கும் மூன்று மால்வேர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

தற்போது, இந்த ஏஜெண்ட் ஸ்மித் மால்வேர், ஸ்மார்ட் போன்களில் தொடர்பு இல்லாத விளம்பரங்களை வெளியிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனின் தாக்குதல் மற்றும் விளைவுகள் குறித்து முழு தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை. போலி விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டும் மால்வேர்களாக காப்பிகேட் ( CopyCat ), கூலிகன் ( Gooligan ) மற்றும் ஹம்மிங்பேட் ( HummingBad ) ஆகிய மூன்று மால்வேர்கள் குறித்து சைபர் க்ரைம் எச்சரிக்கிறது.