மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனியாக ஒரு செயலி

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் தனியாக ஒரு செயலி உருவாக்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் சரோஜா மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் தனியாக ஒரு செயலி உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதில் மூன்றாம் பாலினத்தவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை பதிவு செய்துக் கொண்டு அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளலாம். அத்துடன் கல்வித் தகுதி, பயிற்சி மற்றும் பிற தகுதிகளின் அடிப்படையில் வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளவோ அல்லது சுயதொழில் மேற்கொள்ளவோ இந்தச் செயலி உதவும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மூன்றாம் பாலினத்தவர்களில் முன்மாதிரியாக திகழ்பவர்களுக்கு மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் விருதும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

Source : https://bit.ly/2JEZPqE