சர்வதேச சுற்றுலா தினம்

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள், திருமணமான தம்பதியினர், வயதில் மூத்தவர்கள் என அனைவரும் விரும்பும் ஒன்று சுற்றுலா.

இதற்கு இன்றளவில் பலரும் பலவிதமாக பலநாட்களுக்கு முன்பே திட்டம் போட்டு செல்வார்கள். சிலர் திடீரென கெளம்பி சென்று விடுவார்கள்.

எப்படி போனாலும் இதற்கான ஆர்வம் என்றுமே குறையாது. அப்படி சுற்றுலா மீது ஆர்வம் கொண்டவர்களுக்குகாக உருவாக்கப்பட்டது தான் சர்வதேச சுற்றுலா தினம். ( ஜூன் 18 )

கோவையில்  சுற்றுலா செல்ல சிறந்த 5 இடங்கள்

பொழுது போக்கு 

1.வெள்ளிங்கிரி மலை :

இது கோவையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. இது மேற்குமலைத்தொடரில் அமைந்துள்ளது.

இது பக்தர்களால் தென்கயிலை என  அழைக்கப்படுகிறது. இது சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி,1524 m) இந்த மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது.

2.கோவை குற்றாலம் :

கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் உள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. அதனால் இங்கு 5 மணிக்கு மேல் பொதுமக்களை அனுமதிப்பதில்லை. வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் அதிகமான பொதுமக்கள் சுற்றுலா செல்ல விரும்பும் இடமாக இருக்கிறது. அனால் தற்பொழுது கோவை குற்றாலம் அதிக பாதுகாப்பதுடன் இருந்தாலும் அதிக பொது மக்கள் வருவதால் சுத்தமாக இருக்க வாய்ப்புகள் குறைவு.

3.பிளாக் தண்டர் :

இது கோயமுத்தூரில் இருந்து வடக்கில் 40 கிமீ தொலைவில் உள்ளது. 75 ஏக்கர்கள் (300,000 m) பரப்பளவில்

50-கும் மேற்பட்ட  விளையாட்டுக்களுடன் அமைந்துள்ளது. அவ்விளையாட்டுகளில் மலை சறுக்கு, வன ஆற்றுச் சவாரி போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். தற்பொழுது இதற்கான டிக்கெட் விலை  அடல்ட்-கு  750 ரூ, குழந்தைகளுக்கு குழந்தைகளுக்கு 650 ரூ, 3-10 வயது குழந்தைகளுக்கு 450 ரூ, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 550 ரூ.

4.கொடிவேரி :

கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் சத்தியமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.1125 ம் நூற்றாண்டில் ஊராளி செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வானால் கட்டப்பட்டது.

5.குரங்கு அருவி :

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ளது. இது பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஆழியார் ஆணைக்கு அடுத்ததாக இருக்கிறது.

திருத்தலங்கள்

1.கோணியம்மன் கோவில்:

இது கோவையின் மத்திய நகரான ரயில் நிலையம் அருகில் டவுன்ஹாலில் அமைந்துள்ளது. இது கோவையில் அடையாளமாக இருக்கிறது.

2.பேரூர் பட்டிஸ்வரர் கோவில் :

இது கோயம்புத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.இக்கோயில் கரிகால சோழனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இது கோவை மாநகரில் மிகவும் பழமையான கோவில்.

3.மருதமலை :

இது கோயம்புத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் கோயில் முருகனின் ஏழாம் படைவீடாகக் கருதப்படுகிறது. இக்கோவில் மிகவும் பழமையானது. இது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது.

4.தென்-திருப்பதி :

சிறுமுகை அருகே அமைந்துள்ளது தென்திருப்பதி தலம். இது ஆந்திர மாநிலத்தில் திருமலை -திருப்தியிலுள்ள ஸ்ரீவாரி கோயில் போன்றது. இக்கோயில் சுமார் 1000 அடி உயரத்தில் ஒரு இயற்கை மலை மீது அமைந்துள்ளது.பசுமையான நீலகிரி மலைகள் பின்னணியில், சிறிய கோபுரங்களுடன் காட்சியளிக்கிறது.

5.ஈச்சனாரி விநாயகர் கோவில் :

இது கோயம்புத்தூரில் இருந்து 10 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட இக்கோயிலின் பிள்ளையார் சிலை பேரூர் பட்டீசுவரர் கோயிலில் வைப்பதற்காக மதுரையிலிருந்து வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இவ்விடத்தில் வண்டியின் அச்சு முறிந்து போனதாகவும், சிலையையும் அங்கிருந்து நகர்த்த முடியவில்லை என்பதாலும், அதே இடத்தில் அத்திருவுருவத்திற்கு கோயில் அமைக்கப்பட்டதாக, மரபு வரலாறு கூறுகிறது.