மகாராஷ்டிரா வனத்துறை, ஈஷா அறக்கட்டளை இணைந்து 50 கோடி மரங்கள் நடவுள்ளது

மஹாராஷ்டிரா மாநில வனத்துறை மற்றும் ஈஷா அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இமஹாராஷ்டிரா மாநில வனத்துறை மற்றும் ஈஷா அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் தேவேந்திர பட்நாவிஸ், மகாராஷ்டிரா மாநில முதல்வர், சத்குரு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர், சுதிர்முகந்திவர், மகாராஷ்டிரா நிதி மற்றும் வனத்துறை அமைச்சர், பிரகாஷ்ஜவடேகர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், நிதின் கட்காரி, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை அமைச்சர் மற்றும் பலர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையழுத்திடப்பட்டது.

2017இல் தொடங்கி அடுத்த 3 வருடங்களுக்குள் மகாராஷ்டிரத்தில் 50 கோடி மரங்கள் நட்டு மஹாராஷ்டிரத்தின் பசுமை போர்வையை கணிசமாக அதிகரிக்கும் பொருட்டு இவ்வொப்பந்தம் கையழுத்திடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பசுமைப் போர்வை அதிகரிப்பு திட்டத்தின் கீழ் குறிப்பாக கோதாவரி நதி வெள்ளப் பெருக்கு பகுதியில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டு அதிக அளவில் மரங்கள் நடப்படவுள்ளது.

தென்னிந்தியாவில் பசுமைப் போர்வையை அதிகரித்ததில் வெற்றிகரமாக விளங்கிக் கொண்டிருக்கும் ஈஷா அறக்கட்டளை இத்திட்டத்தில் மகாராஷ்டிரா அரசுக்கு ஆலோசனை மற்றும் தொழில் நுட்பபங்காளியாக இருக்கும், மகாராஷ்டிரா அரசு, ஈஷா அறக்கட்டளையின் ஆலோசனை மற்றும் உள்ளீடு மூலம் 3 வருடங்களில் 50 கோடிமரங்களை (2017இல் 4 கோடிமரங்கள், 2018இல் 13 கோடி மரங்கள் மற்றும் 2019 இல் 33 கோடி மரங்கள் என்ற விகிதத்தில்) நட்டு வளர்க்க உள்ளது. மகாராஷ்டிரா வனத்துறை ஈஷா அறக்கட்டளையின் பசுமைகரங்கள் திட்டத்தின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் துணையோடு இத்திட்டத்திணை வழிநடத்தும்.

மேலும் ஈஷா அறக்கட்டளை மத்தியபிரதேசத்தில் ” நர்மதா நதி புத்துயிரூட்டல் ” திட்டத்தின்கீழ் “நமாமிநர்மதே” மற்றும் “நர்மதாசேவாயாத்ரா” போன்றவற்றில் மத்தியபிரதேச அரசுடன் பணியாற்றி வருகிறது. வற்றி கொண்டிருக்கும் நம் தேச நதிகள் மீண்டும் பெருக்கெடுத்து ஓட சத்குரு அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு நதிகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள உள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இம்முயற்சியை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த மரநடு விழாவில் பங்கேற்ற மகாராஷ்டிரா முதல்வர் ” இம்முயற்சியில் மகாராஷ்டிரம் முன்னோடியாக திகழும் “என்றும்,” நதிகளை நாம் காக்கவில்லை என்றால் நம்மை யாரும் காப்பாற்ற முடியாது”, என்றும் கூறினார்.

சத்குரு அவர்கள் கூறுகையில் “நாம் நமது நீர் மற்றும் நிலத்தின் நிலை குறித்து போதிய கவனம் கொடுக்கவில்லை என்பதால் தான் இந்த வளங்கள் குறைந்து கொண்டு இருக்கின்றன “,என்றும்,” நாம் சேதம் ஏற்படுத்தியுள்ளோம் என்றால் நம்மால் அதை சரி செய்யவும் முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்”, என்றும் “இதற்கு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் மாற்றம் உருவாக்கம் பொருளாதாரத்திட்டம் வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் நாம் சரியான வகை மரங்கள் நட்டு வளர்ப்பதன் மூலம் நம் விவசாயிகளின் வருமானத்தை 5 வருடங்களில் 300-800% அதிகரிக்கமுடியும் “, என்றும் கூறினார்.

ஈஷா வின் பசுமைக்கரங்கள் திட்டம் தமிழகத்தில் 30 லட்சம் தன்னார்வத் தொண்டர்களுடன் 3 கோடிக்கும் மேல் மரம் நட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈஷாவின் பசுமை கரங்கள் இயக்கம்பற்றி:

ஈஷா அறக்கட்டளையின் பசுமைகரங்கள் இயக்கமானது தமிழகத்தின் பசுமைபரப்பை 10% வரை அதிகரிக்கும் பொருட்டு மரம் நடுதலில் ஈடுபட்டு வருகிறது . மேலும் பசுமை பள்ளி இயக்கத்தின் மூலம் பள்ளி மாணவர்களை மரங்கள் நடுவதில் ஈடுபடுத்தி வருகின்றது. சுற்றுசூழலில் மிக உயரிய விருதான இந்திராகாந்தி பரிபா வரன்புரஸ் கார் விருதை 2010 ஆம் ஆண்டு ஈஷா பசுமை கரங்கள் பெற்றுள்ளது, இந்த மகத்தான இயக்கத்தின் மூலம் 2004 ம் ஆண்டு 20 லட்சத்திற்கும் அதிகமான தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து 3 கோடி மரங்கள் தமிழகத்தில் நடப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு 2.5 லட்சம் தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து 856000 மரங்கள் நடப்பட்டது. இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுள்ளது குறிப்பிடத் தக்கது.

மேலும் 2010ல் இந்தியாவின் சுற்று சூழலில் மிக உயரிய விருதான ‘இந்திரா காந்திபரியா வரன்புரஸ்கர் விருது பெற்றுள்ளது மற்றும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருதும் பெற்றுள்ளது.

Contact: 9442641563