ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் ஆண்டுவிழா

ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் ஆண்டுவிழா அண்மையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  சிறப்பு விருந்தினர்களாக ரேடியோ சிட்டி ஆர்ஜே  சியான் மற்றும் ஈஷா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அழகன் சத்தியநாதன் மற்றும் ரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில், நிர்வாக இயக்குனர் மாணிக்கம், பள்ளியின் தாளாளர்  ஷிமா செந்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிகிரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஆர்ஜே சியான்  இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வளரும் குழந்தைகள் அகமனதை பெற்றோர்கள் புரிந்து கொள்வதற்க்கான தேவையையும், குழந்தைகளை  குழந்தைகளாக வைத்திருக்க வேண்டிய  அவசியத்தையும் ரத்தினம் பள்ளி இதை எவ்வாறு செய்கிறது என்பதையும்  பெற்றோர்களுடன் பகிர்ந்து கொண்டார்.  குழந்தை வளர்ப்பு பற்றிய தனது அனுபவங்களை  பெற்றோர்களுடன் சுவையாக பகிர்ந்து கொண்டார் அழகன் சத்தியநாதன்.

ரத்தினம் குழும தலைவர் மதன் செந்தில் தனது உரையில் பள்ளிக் கல்வியில் தொழில்நுட்பம், மனிதவள  மேம்பாடு, கலைகளின் வழியே திறன் மேம்பாட்டை அடைதல் ஆகியவற்றை குறித்து பேசினார்.

பள்ளியின் ஆண்டறிக்கை, அடுத்த கல்வியாண்டின் செயல் திட்டங்கள், மாணவர்களின்  சாதனைகள் ஆகியற்றை பெற்றோர் மற்றும் பார்வையாளர்களுக்கு முதல்வர் மணிகிரண் விளக்கினார். சிறப்பாக செயலாற்றிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து கண்கவரும் கலை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு அசத்தினர். விழாவை சுமார் இரண்டாயிரம் பேர் கண்டுகளித்தனர்.