பனிமழை பொழிவால் சீனாவின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீனாவில் பெய்து வரும் பனிமழை காரணமாக மக்களின் இ‌ய‌ல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

வடமேற்கு சீனாவின் சிங்ஜியாங் உய்கர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் அங்கு வெப்பநிலை மைனஸ் 5 டிகிரிக்கும் குறைவாகி உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் கன்சு மாகாணத்திலுள்ள ஜிங்டாய் பகுதியிலும், கடந்த சில தினங்களாக பனிமழை கொட்டி வருகிறது. வீடுகள், சாலைகள் அனைத்தும் பனியால் சூழப்பட்டுள்ளன. வெப்பநிலையும் மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்து இருப்பதால் பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகளிலும் எதிரே வரு‌ம் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. பனிப்பொழிவின் காரணமாக, நகராட்சி நிர்வாகனத்தினர், சாலைகளை மூடியுள்ள பணிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.