முனைவர் குழந்தைவேலுக்கு பாராட்டு விழா!

‘‘உயர்பண்புகளே உயர்ந்தோர்க்கு அணி என்பதும், அத்தகைய உயர்ந்தோர¢மாட¢டே உலகம் நிலை பெற்றிருக்கிறது’’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆகவே அத¢தகைய சான்றோர்களைப் புகழ்வதும், பாராட்டுவதும், சமுதாயத்தில் மனித பண்புகள் நிலைக்கவும், நெறிசார்ந்த வாழ்க்கை முறை ஏற்றம் பெறவும் வழிவகுக்கும்.

அந்த நோக்கத்தின் அடிப்படையில் கோவை ராமகிருஷ்ண வித்யாலயம் மற்றும் அவினாசிலிங்கம் பல்கலைக¢ கழகத்தில் உயர் பொறுப்புக்களில் பணியாற்றியகல்விச் செம்மல் முனைவர் க.குழந்தைவேல் அவர்களின் 60 ஆண்டுகால கல்வி மற்றும் சமுதாயப்பணியைப் போற்றும் வகையில், அவருக¢கான பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இவ¢வ¤ழா பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க¢ கல்லூரியில் குழந்தைவேலுவின் முன்னாள் மாணவர் களின் முயற்சியாலும் சாந்தலிங்கர் திருமடத்தின் உறுதுணையோடும் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழி பேரூராதினம் கயிலைக்குருமணி முதுமுனைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் தலைமை ஏற்று ஆசியுரை வழங்கியதோடு, முனைவர் குழந்தைவேல் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

பேரூராதினம் இளைய பட்டம் முனைவர் தவத்திரு மருதாசல அடிகளார் விழா மலரை வெளியிட்டார்.

கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணாராஜ் வாணவராயர், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை (கே.எம்.சி.எச்) இன் தலைவர் டாக்டர் நல்லஜி.பழனிசாமி, காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ந.மார்கண்டன், அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முனைவர் டி.எஸ்.கே.மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் அ.ம.மூர்த்தி, ஈரோடு யு.ஆர்.ஸி. கட்டுமானக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சி.தேவராஜன், முன்னாள் கல்லூரிக் கல்வி இயக்குநர் முனைவர் குமாரசாமி உடுமலை ஆர்.கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.இராமசாமி, சிந்தனைக்கவிஞர் கவிதாசன், கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் முனைவர் சி.ஏ.வாசுகி, என்.ஜி.ஆர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமைஆசிரியர் ஐ.சி.கோவிந்தசாமி, ஞிக்ஷீ.என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி முதல்வரும், பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் பி.ஆர்.முத்துசாமி பட்டயக்கணக்காளர் அ.மா.அழகிரிசாமி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலைஅறிவியல் தமிழ் கல்லூரியின் செயலர் பழ.தரும.ஆறுமுகம் ஆகிய சான்றோர்கள் முன்னிலை வகித்து, வாழ்த்துரை வழங்கினர்.

இளைய தலைமுறைக்கு முனைவர் க.குழந்தைவேல் போன்ற நெறி சார்ந்த வாழ்க்கை வாழ்வோரை அறிமுகப்படுத்துவதோடு மட்டு மின்றி அவர்களது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தியும், மற்றும் அத்தகைய ஆன்றோரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு மற்றவர்களும் தங்களது வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும் வேண¢டும¢ என விழாவில் பேசிய சான¢றோர் ஆலோசனை கூறினர். முன்னதாக குழந்தைவேல் பற்றிய ஒளிப்படக்காட்சி ஔ¤பரப¢பப¢பட்டது.

விழாவில் பங்கேற்றோர் முனைவர் குழந்தைவேலுக்கு பொன்னாடை போர்த்தியும், பாராட்டுப் பத்திரங்கள் அளித்தும் சிறப்பித்த தோடு, அவர்களிடமும் அவர்களது துணைவியாரிடமும் ஆசி பெற்றுக் கொண்டனர்.முனைவர் குழந்தைவேல் அவர்களின் முன்னாள் மாணவர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் சுமார் 350பேர் கலந்து கொண்டனர்.

கோவை விவேகானந்தா மேலாண்மைக் கல்லூரியின் செயலர் முனைவர் வே.குழந்தைசாமி வரவேற்றார்.

விழா ஏற்பாடுகளை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதன்மைச் செயல் அலுவலர் முனைவர் வை.சின்னசாமி அவர்களும் விழா நிகழ் முறைகளை டாக்டர் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெ.இராமகிருஷ்ணன் அவர்களும் நெறிப்படுத்தினர்.