ஜி.கே.என்.எம் நிறுவிய பாரம்பரிய கலைபடைப்புகள்

கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை தமிழர்களின் பாரம்பரிய கலாசார நினைவுகளை பறைசாற்றும் வகையில், மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.

குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையானது, மருத்துவ சேவை மட்டுமல்லாது சகாப்தங்கள் கடந்து மக்கள் சேவையிலும் இன்றியமையாது பங்காற்றி வருகிறது. அந்த வகையில், தமிழர்களின் பாரம்பரிய கலாசாரங்களை வளரும் தலைமுறையினர் நினைவு கூறும் பொருட்டு, கோவை மாநகரின் முக்கிய சாலைகளான பந்தய சாலை மற்றும் சுங்கம் சதுக்கம் ஆகிய இடங்களில் ரேக்ளா ரேஸ் மற்றும் குதிரை ஜாக்கி ஆகிய சிலைகளை நிறுவியுள்ளது.

May be an image of monument and text

பருவ காலநிலைக்கு ஏற்ற வகையில், ஃபைபர், அலுமீனியம் மற்றும் ஸ்டீல் ஆகியன கொண்டு இந்த சிலைகளானது தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை வாசிகளின் பிரதான இடமான பந்தய சாலையில் (ரேஸ் கோரஸ்) அமைக்கப்பட்டுள்ள குதிரை ஜாக்கி சிலையின் பின்னியில் சுவாரஸ்சியா வரலாற்று தகவல் உள்ளது. அதாவது, உதகையில் மிகவும் பிரபலமான குதிரை பந்தய தடங்கள் அமைவதற்கு முன்பு கோவையில் தற்போது உள்ள பந்தய சாலை குதிரை சவாரிக்குப் பயன்படுத்தப்பட்ட  நீள்வட்ட பாதையாக இருந்தது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக வரலாற்று ஆசிரியர் ராஜேஷ் கோவிந்தராஜுலு, சிஎம் ராமசந்திரன் புத்தகத்தில்  “கோவை கிழார்” எனக் குறிப்பிடுகிறார். அந்த காலத்தில் ரேஸ் கோர்ஸை சுற்றி குதிரைகள் சீறிப்பாய்ந்தன. மேலும், இங்கு குடிமைப்பணி மற்றும் இராணுவ நிர்வாகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்ட ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பந்தயங்களில் கலந்து கொண்டனர் என்பது வரலாறு.

May be an image of 5 people, monument and text

இதனை பறைசாற்றும் வகையில் ரேஸ் கோர்ஸ் சாலையில் 9*12 அடியில் ஆயிரம் கிலோ எடையுடன் குதிரை ஜாக்கி சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும், தமிழர் பண்பாட்டு, பழந்தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான மாட்டுவண்டி பந்தயம் (ரேக்ளா ரேஸ்), தமிழர்களின் பண்டிகையாம் பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பெரும் இந்த ரேக்ளா ரேஸை விளையாட்டு போட்டியை நினைவு கூறும் வகையில் சுங்கம் சதுக்கத்தில் 1*10 அடியில் ஆயிரம் கிலோ எடையுடன் சீறிப் பாயும் ரேக்ளா ரேஸ் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிலை திறப்பு நிகழ்வு 

May be an image of 7 people, dais and text

இத்தகைய தமிழர்களின் பாரம்பரிய கலாசார நினைவுகளை பறைசாற்றும் வகையில் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை நிறுவிய ரேக்ளா ரேஸ் மற்றும் குதிரை ஜாக்கி ஆகிய சிலைகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு, கோவை மாநகராட்சி காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும், இந்நிகழ்ச்சியில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் துணைத் தலைவர் கோபிநாத் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

நகரத்தை அழகுபடுத்தும் பங்களிப்பு – கோபிநாத், துணைத் தலைவர் குப்புசாமி நாயுடு அறக்கட்டளை

May be an image of 3 people, newsroom and text

இதுகுறித்து பேசிய குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் துணைத் தலைவர் கோபிநாத், பழங்கால தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை போற்றும் வகையில், அடுத்த தலைமுறையினர் நினைவு கொள்ளும் வகையில் ஜி.கே.என்.எம் இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க சிலைகளை நிறுவியுள்ளது. மேலும், ஸ்மார்ட் சிட்டி கோவைக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக சிலைகள் அமைந்துள்ளது என்றார்.