தேசிய அளவிலான ரோல் பால் விளையாட்டு போட்டிகள் கோவை வீராங்கனைகள் சாதனை!

    குஜராத் மாநிலத்தில் தேசிய அளவிலான ரோல் பால் விளையாட்டு போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் கோவையை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் 11 வயதிற்குட்பட்ட பிரிவில் கோவையை சேர்ந்த மகளிர் அணி தங்கப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்து உள்ளது. அதே போல ஆடவர் அணியினர் வெண்கலப் பதக்கத்தை பெற்று உள்ளனர்.   மேலும் நான்கு வீரர்கள் ,  மூன்று நாள் தொடர்ந்து ரோல் பால் விளையாட்டில் பங்கேற்று கின்னஸ் சாதனை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இதிலும் வெற்றியை பெற்று உள்ளனர். இந்நிலையில் கோவை திரும்பிய இவர்களுக்கு கோவையில் உள்ள ரோல் பால் விளையாட்டு சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரோல் பால் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் அனைவரும் கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரோல் பால் சங்கத்தினர், வீரர் வீராங்கனைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.