கற்பகம் மருந்தியல் கல்லூரியில் வரவேற்பு விழா

கற்பகம் மருந்தியல் கல்லூரியில்  பி.பார்ம்  முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது . கல்லூரி முதல்வர் மோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கற்பகம் கல்வி குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆதிபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இதில் கற்பகம் மருந்தியல் கல்லூரியின் ஆராய்ச்சி துறை இயக்குநர் நாகராஜன் , பேராசிரியர்கள் கந்தசாமி, கற்பகவல்லி, ராம்காந், மாதேஸ்வரன், சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

விழாவைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கும் ,சந்தேகங்களுக்கும்  கல்லூரி முதல்வர் பதிலளித்தார். இவ்விழாவில் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.