பி.எஸ்.ஜி மருத்துவமனையில் பெண்களுக்கான மாரத்தான்

பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் ‘பி.எஸ்.ஜி ஹார்ட்டத்தான் 23’ என்ற பெண்களுக்கான மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை கோவை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பி.எஸ்.ஜி அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் சுப்பாராவ், பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குநர் புவனேஸ்வரன், இருதய துறை மருத்துவர் ராஜேந்திரன், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மராத்தான் 3 கிலோமீட்டர், 7 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளில் நடந்தது. இதில் சுமார் 1200 பெண்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளித்தார்.

 

இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பறை இசையுடன் நிகழ்வை உற்சாகமாக கொண்டாடினர்.