கே.பி.ஆர். கலை கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் , விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி முதல்வர் கீதா தலைமையேற்று வழிபாட்டினை தொடங்கி வைத்தார். இதில், பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் விநாயகரின் திருவுருவ சிலைகளை வைத்து வழிபட்டனர். மேலும், விநாயகரின் புராண வரலாற்றை மாணவர்கள் நாடகமாக நடித்துக் காட்டியது மட்டுமல்லாமல் திருமுறைப்பாடல்களையும், விநாயகரின் துதிப்பாடல்களையும் பாடினர். அதைத்தொடர்ந்து, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவில் டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.