100% அஞ்சல் கணக்கில் சச்சிதானந்த பள்ளி மாணவர்கள் சாதனை

மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவியர் அனைவரும் 2001 ஆண்டு முதல் தொடர்ந்து அஞ்சல் தலைகள் சேகரிப்புக் கணக்கில் உறுப்பினர்களாக உள்ளனர்.

நடப்பு ஆண்டு பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவியர் உறுப்பினர் சேர்க்கைக்காக, ரூ.1,53,800 வரைவோலையினைப் பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வழங்க, மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் நிலையத்தின் தலைமை அதிகாரி நாகஜோதி பெற்றுக்கொண்டார்.

பள்ளியில் செயல்பட்டு வருகின்ற சச்சிதானந்தர் அஞ்சல்தலை மன்றத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் அஞ்சல் தலை சேகரிப்பில் பங்கு கொள்வதுடன், அஞ்சல்தலை மற்றும் நாணயங்கள் சார்பாக, அஞ்சல் துறை நடத்தி வருகின்ற போட்டிகள் மற்றும் அஞ்சல்தலைக் கண்காட்சிகளில் பங்கேற்றுப் பரிசுகளைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, பள்ளியின் சச்சிதானந்தர் அஞ்சல்தலை மன்றப் பொறுப்பாசிரியர் ராஜசேகர் மற்றும் அஞ்சல் நிலைய அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.