ஜெம் மருத்துவமனை இயக்குனர் பழனிவேலுக்கு இங்கிலாந்து பாராளுமன்றம் பாராட்டு

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டாக்டர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 25 பிரபல மருத்துவர்களுக்கு பதக்கம் அனுவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டு பெற்றனர். இந்தியாவில் இருந்து இத்தகைய விருது பெறுவது இதுவே முதல் முறையாகும். மருத்துவ துறையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. பல நவீன சிகிச்சை முறைகளை கண்டறிந்து லேப்பிராஸ்கோபி கேன்சர் சர்ஜரி வளர்ச்சி அடைய செய்ததை பாராட்டி டாக்டர். பழனிவேலுக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. 1990 ல் தென்னிந்தியாவில் முதன்முதலில் லேப்பிராஸ்கோபி சிகிச்சையை அறிமுகம் செய்தவர். உலகில்  பல நாடுகளிலும் சிறந்த சிகிச்சை முறைகளில் விருதுகள் பெற்று உள்ளனர்.

டாக்டர். பலனிவேலும் சிகிச்சை முறை மற்றும் பாராட்டும் உணவுக் குழாய் மற்றும் கணைய புற்றுநோய் லேப்பிராஸ்கோபி முறையில், உலக நாடுகள் அணித்திலும் சிறந்த சிகிச்சைய ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. வலி இல்லாமல், விரைவில் குனமடைவதொடு மட்டுமல்லாமல் வாயிற்று புற்றுநோய் சிகிச்சையில் லேப்பிராஸ்கோபி முறையில் பல நன்மைகள் உள்ளன. பன்மடங்கு பெரிதுபடுத்தி பார்க்க இயலுவதால் புற்றுக் கட்டியை அகற்றுவது சுலபம். ரோபோட்டிக் கருவியின் மூலம் வயிற்று புற்றுக் கட்டிகளை அகற்றுவது மேலும் சாத்தியாகி உள்ளது. இவர் எழுதிய புத்தகங்கள் ஸ்பானிஸ், சீனா, கொரியா, போன்ற மொழிகளில் படமாக பின்பற்றுவதால் டாக்டர். பழனிவேலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் அந்நாட்டு மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்க சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. 2004  ஆம் ஆண்டு ராயல் காலேஜ் ஆப் சர்ஜன் ஆப் எடின்பர்க் பல்கலைக் கழகம் கெளரவ FRCS பட்டம் வழங்கியது. இங்கிலாந்து நாட்டில் பல பல்கலைக் கழக மருத்துவமனையில் ஆண்டுதோறும் சென்று அருவை சிகிச்சை செய்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கெளரவ விருது வழங்கியது. இதுபோல பல நாடுகளிலும் இவர் புகழ் பெற்று உள்ளார்.