மலேசியாவில் நடைபெறும் உலக தமிழ் மாநாட்டிற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு

11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் நடக்க உள்ளது. ஜூலை 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அங்குள்ள பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் 100 நாடுகளை சேர்ந்த 2500 தமிழறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் மலேசியாவில் நடைபெற உள்ள உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று உலகத்தமிழ் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.