கோவை நேரு தொழில்நுட்பக் கல்லூரியில்  பட்டமளிப்பு விழா

கோவை – பாலக்காடு சாலையில் காளியாபுரத்தில் அமைந்துள்ள  நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பட்டம் பெற்ற 286 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு வந்திருந்தவர்களை கல்லூரியின் முதல்வர் டாக்டர். என். ராஜ்குமார்  வரவேற்றார். நேரு கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர் .பி. கிருஷ்ணகுமார், முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக சென்னை, சேவ்சாப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஹெச்ஆர் திரு.கிருஷ்ணன் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியபோது, உயர்நிலைப் படிப்பை தொடரும் மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கோயம்புத்தூர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதில் நேரு கல்விக் குழுமங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. மாணவர்களின் அறிவுகளை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு உயர் கல்விக்கு மிகவும் அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார். உயர்கல்வியைப் பின்தொடரும் மாணவர்கள் அறிவை புதுப்பிப்பது இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பட்டம் பெற்ற மாணவர்களையும் பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.