இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலானது கருத்தரங்கம்

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப துறையின் சார்பாக ஸ்பைடர் 2018 என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி வேலைவாய்ப்பு, மாணவர்கள் ஐ.டி.துறையில் உள்ள கம்பெனிகளின் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களிடையே விளக்கமாக கூறப்பட்டது. மேலும் தேசிய அளவிலான இந்த கருத்தரங்கில் டிபக்கிங், வினாடி- வினா, மார்கெட்டிங், வெப்டிசைனிங் உள்ளிட்ட பல பிரிவுகளில் மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் Cognizant-ன் திட்ட இயக்குனர் பழனிசெல்வன் சபாபதி , பெங்களூரை சேர்ந்த Appiness interactive PVT.LTD ன் நிர்வாக இயக்குனர் விஷாக் விஸ்வாம்பரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தனர். மேலும் இந்த கருத்தரங்கில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் செயலர் முனைவர் பிரியா சதீஸ் பிரபு, முதல்வர் பொன்னுசாமி, துறைத் தலைவர் சரவணன் மற்றும் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். .