டாக்டர். என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

கோவையில் உள்ள என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறைகளின் சார்பாக இலக்குமுறை சகாப்தத்தில் வணிகவியல் வாய்ப்புகள் மற்றும் வர்த்தக சவால்கள் என்னும் தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கின் துவக்க விழா இன்று நடைபெற்றது. கோவை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிச்சாமி , கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நல்ல பழனிச்சாமி, இலக்குமுறை வர்த்தகத்தின் காரணமாக தொழில் துறையில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சி குறித்த பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தார். என்.ஜி.பி கல்விக் குழுமங்களின் முதன்மை செயலர் ஓ.டி.புவேஷ்வரன் மற்றும் இயக்குனர் முத்துசாமி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். கருத்தரங்க அமைப்பு குழுத் தலைவர் பிரகாஷ் கலந்து கொண்டு கருத்தரங்கின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். டிசிஎஸ் நிறுவனத்தின் ரிஜினல் HR, குருபரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இலக்குமுறை வர்த்தகம், அதன் வளர்ச்சி போக்குகள், இலக்குமுறை வர்த்தகத்தின் வழி சர்வதேச வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் அடைந்துள்ள மேம்பாடுகள், நவீன தொழில் வாய்ப்புகளுக்கான சாத்தியக் கூறுகள் மற்றும் சவால்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த கருத்தரங்கில் பிற கல்வி நிறுவனங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஆய்வு கட்டுரைகளை வழங்கினர்.