கோவையில் முகத்தாடை சீரமைப்பு நிபுணர்களின் விழிப்புணர்வு நடைபயணம்

வாய் புற்றுநோயால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர் கோவையில் முகத்தாடை சீரமைப்பு நிபுணர்களின் விழிப்புணர்வு நடைபயணத்தை துவக்கி வைத்து ஐஜி பாரி பேசினார்

கோவை நேரு ஸ்டேடியம் முன்பு முகத்தாடை சீரமைப்பு நிபுணர்களின் விழிப்புணர்வு நடைபயணம் இன்று காலை துவங்கியது இந்திய மருத்துவர்  சங்க  நிர்வாகிகள் மருத்துவ நிபுணர்கள் செவிலியர்கள்  பொதுமக்கள்  என  500க்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர் ஐந்து கிலோமீட்டர் அளவிற்கு நடந்த நடைபயணத்தை மேற்கு மண்டல காவல்துறை ஐஜி பாரி கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்

முகத்தாடை சீரமைப்பு நிபுணர்கள் சார்பில் நடைபெறும் முருகன் விழிப்புணர்வு பிரச்சாரம் புகையிலை பயன்பாட்டிற்கு எதிராகவும் விபத்து தடுப்பதற்கு பயனுள்ளதாகும் இந்தியாவின் வாய்ப் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது ஆண்டுக்கு இந்த நோயால் 10 லட்சம் பேர் பாதிப்படைந்து வருகின்றனர் ஒரு மில்லியன் பேருக்கு வாய் புற்றுநோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்து வருகிறது இன்றைய இளைஞர்கள் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனை அளிக்கிறது இவற்றிலிருந்து மீள வேண்டும் உலகிலேயே அதிக அளவு இளைஞர்களை கொண்ட இந்தியாவில் புகையிலை பழக்கம் மற்றும் விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இவற்றை தடுக்க இதுபோன்ற மருத்துவ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து  செய்ய வேண்டும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும்  கார்களில் சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும் என்று ஐஜி பாரி பேசினார்

பிரச்சார ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கண்ணன் பலராமன் கூறியதாவது முகத்தாடை மறுசீரமைப்பு நிபுணர்களின் 43ஆவது தேசிய அளவிலான மருத்துவ மநாடு அடுத்தாண்டு நடைபெறுகிறது இதற்காக இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை முக்கிய நகரங்களில் நடைபெறும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் வாய்ப்புற்று நோய் குறித்தும் விபத்து குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் நாலு நிமிடத்திற்கு ஒருவர் விபத்தில் பாதிக்கப்படுகின்றனர் புகையிலை பழக்கத்தினால் அதிக அளவு வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றார்

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் டாக்டர் ராஜ சபாபதி கங்கா மருத்துவமனை டாக்டர் மாதேஸ்வரன் ராயல் கேர் மருத்துவமனை டாக்டர் சரவணன் ராஜகுமாரன் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை டாக்டர் அருள்குமார் ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆகியோர் முன்னிலை வைத்தனர்