தீராத ‘வலிக்கு’ வழி உண்டு!

கே.ஜி.மருத்துவமனையில் புதிய தொழில்நுட்பத்துடன் சிகிச்சை

டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம், தலைவர், கே.ஜி. மருத்துவமனை

நம் உடலில் காயங்கள் அல்லது வியாதிகளால் சில நேரங்களில் அதீத வலி ஏற்படக்கூடும். நாள்பட்ட தீராத வயிற்றுவலி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளால் தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏராளம். வலியால் உயிரை மாய்த்துக் கொண்டதாக கோவை மாநகரப் பகுதியில் மட்டும் மாதந்தோறும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின்றன.

இந்த வலிகளைக் குறித்தும் இதற்கான நிவாரண வழிகளைக் குறித்தும் இந்த வார மருத்துவ விழிப்புணர்வுத் தகவலையும் கே.ஜி. மருத்துவமனையில் செயல்படும் வலி நிவாரண மையம் குறித்தும் விளக்குகிறார் மருத்துவமனையின் தலைவர் கே.ஜி.பக்தவத்சலம்:

‘நோய் என்பது வலியை உண்டாக்குகிறது. வலி என்பது நோயைக் குறித்து நாம் விழிப்புணர்வு அடைய கடவுள் கொடுக்கும் அறிகுறி எனலாம். நமது உடலில் ஏதோ ஒரு பிரச்னை அல்லது  உடல் பாகங்களில் ஏதோ ஒன்று சரி இல்லை என்பதைத்தான் வலி நமக்கு உணர்த்துகிறது. ‘ஏ சிம்ப்டமேட்டிக் ஹார்ட் அட்டாக்‘ போன்ற மாரடைப்புகளும் இன்னபிற வியாதிகளும் வலி இல்லாமலே ஏற்படும்.

உடலில் வலி ஏற்பட்டால், அதற்கு ஓய்வு எடுப்பது மற்றும் மருந்துகள் உட்கொள்வதை நாம் ஒரு நிவாரண வழிமுறையாகக் கையாள்கிறோம். கணையத்தில் கல் இருந்தாலும் மிக அதிகமான வலி ஏற்படும். சிறுநீரகக் கல், பித்தப்பையில் கல் உள்ளிட்ட பிரச்னைகளும் வலியை ஏற்படுத்தக் கூடியவையே. வயிற்று வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். இந்த உண்மையை உயிர் வரை உணர்ந்தவர்களே தனது உயிரையும் மாய்த்துக்கொள்ளத் துணிகின்றனர். இந்த உயிர் போகும் வலியைக் குறைத்து குணப்படுத்தும் வித்தையைக் கற்றுத் தெளிந்தவர்தான் சிறந்த மருத்துவர்.

பல்வேறு நோய்களை குணமாக்க நமது கோவையில் ஏராளமான மருத்துவர்கள் உள்ளனர். ஆனால் தீராத வலிகளைக் குணப்படுத்த இங்கே நான்கு சிறந்த மருத்துவர்களே உள்ளனர். அவர்களில் ஒருவர், வலியைக் குணப்படுத்தும் நிபுணத்துவம் பெற்ற நமது கே.ஜி. மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன், மருத்துவர் மோகன்காந்தியும் சிறந்தவர்.

எங்கள் மருத்துவமனைக்கு, விபத்து அல்லது நோய் மூலமாக ஏற்படும் வலியுடன் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலில் மருத்துவர் செந்தில்குமார் உடனடியாக சிகிச்சை அளித்து, வலியைக் கட்டுப்படுத்துகிறார். அதன்பின்னரே மற்ற சிகிச்சைகள் துவங்கும்.

பொதுமக்களுக்கு நாங்கள் சொல்வது என்னவென்றால், எங்கள் கே.ஜி. மருத்துவமனையில் சிறந்த வலி நிவாரணி மையம் செயல்படுகிறது. எனவே, உங்கள் உடலில் தீராத வலி ஏற்பட்டால், அரிய மானிட இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். எங்கள் கே.ஜி. மருத்துவமனைக்கு வாருங்கள். உங்களுக்காக உதவி செய்யக் காத்திருக்கும் எங்களிடம் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். நோயும் வலியும் இல்லா நல்வாழ்வைத் துவக்குங்கள்’ என்றார்.

மேலும் தகவல்களுக்கு 0422 222 2222, 98422 66630.

நீண்ட நாள்பட்ட வலிகள் நிமிடத்தில் மறையும்

டாக்டர் செந்தில்குமார், க்ரானிக்கல் பெயின் ஸ்பெஷலிஸ்ட்

கே.ஜி. மருத்துவமனையில் ‘கிரானிக்கல் பெயின் ஸ்பெஷலிஸ்ட்’ டாக்டர் செந்தில்குமார் நீண்ட நாள்பட்ட வலிகள் குறித்து கூறியதாவது,

‘வலிகளில் பல வகை உண்டு. எலும்பு, நரம்பு, தசைப் பிடிப்பு, மூட்டுகளில் வலி போன்றவை மூன்று மாதங்களில் இருந்து லேசாகத் தொடங்கி 10 வருடங்கள் வரை நிரந்தரமாக நோயாளியை விட்டுப் பிரியாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும். இதனால் மக்கள் பல்வேறு விதமான பிரச்னைக்கு ஆளாவார்கள். இதுவரை இந்த நீண்ட நாள் வலிகளுக்குத் தீர்வு இல்லாமலே இருந்தது. இந்நிலையில், கடந்த 10 முதல் 15 வருடங்களுக்குள் இதற்கான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதுடன், நவீன சிகிச்சைகளும் வந்துள்ளன.

நாள்பட்ட மூட்டு, இடுப்பு வலியால் நடக்ககூட முடியாத நிலையில் மருத்துவமனைக்கு வீல் சேரில் வருபவர்கள் மற்றும் கால் முழங்கால், இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் கூட வலி நிவாரண மருந்துகள் செலுத்தும் அதி நவீன கருவிகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மிக இயல்பாக நடந்து வீட்டுக்கு செல்கிறார்கள்.

இதற்கான அதிநவீன மருத்துவ சிகிச்சை முறைகள், மருந்துகள் வலி நிவாரண சிகிச்சையில் தற்போது வந்துள்ளன. 50 முதல் 80 வயது உள்ளவர்கள் ஆபரேஷன் செய்வதற்குத் தயங்குவார்கள். அப்படி இல்லை என்றால், அவர்களுக்குப் பல நோய்கள் உடலில் இருக்கும். அதனால் அவர்களுக்கு அனைத்துப் பரிசோதனைகளும் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இதனால் ஏற்படும் வலி காரணமாக மக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாவார்கள். ஒருவரது இயல்பான எண்ணங்களை மாற்றும், தூக்கத்தைக் கெடுக்கும், கோபம், மனச்சோர்வு போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

நாள்பட்ட வலிக்கும் சாதாரண வலிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒருவருக்கு காலில் அடிபட்டால் சிகிச்சை எடுத்த பின்பு அந்த இடத்தில் வரக்கூடிய வலி சாதாரணமானது. கிரானிக்கல் பெயின் என்பது காயமோ அடியோ ஏற்படாமல் தொடர்ந்து உடலின் ஒரு பகுதியில் வலி இருந்துகொண்டே இருக்கும்.

இதைவிட மிகவும் மோசமானது, suicide tendency வலி ஆகும். இது, தொடர்ந்து ஏற்படும்  வலியின் இன்னல்கள் காரணமாக ஒருவருக்குத் தற்கொலை செய்யும் எண்ணத்தைத் தூண்டும். அந்த அளவிற்கு இந்த வலி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

எனவே, இதுபோன்ற வலி உள்ளவர்களுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை எடுத்துப் பார்த்து, பின்னர் அவர்களுக்கு எந்தப் பகுதியில் வலி இருக்கிறதோ அந்தப் பகுதியில் PRP (Platelet-Rich Plasma) எனும் பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனை மூலம், அவர்களுடைய இரத்தத்தை எடுத்து, சிவப்பு இரத்த அணுக்களை வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளிலிருந்து பிரித்த பின்பு, அந்த பிளேட்லெட் மீண்டும் ஊசி மூலமாக வலியுள்ள இடத்தில் செலுத்தும்பொழுது அவர்களுக்குப் பூரண வலி நிவாரணம் ஏற்படுகிறது.

எப்படியெனில், ஊசி செலுத்தும்போது அவர்களுக்கு அந்தப் பகுதியில் புதிய செல்கள் உருவாகிறது. அதனால் அவர்கள் குணமடைகின்றனர். தோள்பட்டை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படக்கூடிய வலிகளுக்கும் எளிமையான மருத்துவம் உள்ளது.

எந்தப் பகுதியில் வலி இருக்கிறதோ அதே பகுதியில் ஊசி மூலமாக மருந்து செலுத்தி வலியைக் குணப்படுத்தலாம். அதனால் நீண்ட நாள் வலிகள் இருப்பவர்கள், நமக்கு நிரந்தரத் தீர்வு இல்லையே என வருந்தத் தேவையில்லை. உங்கள் எல்லா வலிகளுக்கும் தீர்வு கே.ஜி. மருத்துவமனையில் கிடைக்கிறது.

வலி நிவாரண சிகிச்சை என்பது உடல் உறுப்புகளில் ஏற்படும் நாள்பட்ட வலிகளுக்கு மட்டும் அல்ல. மிக சவாலான அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் மன பயத்தைப் போக்கி இயன்முறை மருத்துவம் செய்துகொள்ள உதவும் வகையில் வலி நிவாரண சிகிச்சையானது, தற்போதைய நவீன மருத்துவத்தில் ஒரு இணை உதவி மருத்துவமாகப் பயன்படுத்தப்படுகிறது.

“வலி இல்லாத வாழ்வு என்பது வரம்… அதைத் தருவதே கே.ஜி. மருத்துவ வலி நிவாரண மையத்தின் தரம்“ என்ற  நோக்கத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு, கே.ஜி. மருத்துவ மையத்தின் தலைவர் பத்மஸ்ரீ Dr. GB அவர்கள் வழிகாட்டுதலோடு வலி நிவாரண மருத்துவ மைய சிறப்பு மருத்துவர் தலைமையிலான குழுவினர் மக்களுக்குத்  தன்னலமற்ற சேவையை செய்து வருகிறார்கள்’ என்றார்.

தலை வலியைப் போக்க சில ஆலோசனைகள்!

டாக்டர் ராமகிருஷ்ணன், நரம்பியல் நிபுணர்

கே.ஜி மருத்துவமனையின்  நரம்பியல் துறை டாக்டர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

“நரம்பியல் மருத்துவத் துறையில் சிகிச்சையின்போது ஒரு நோயாளி, 50 சதவீதத்திற்குமேல் வலியால்தான் அவதிப்படுகிறார்.

நரம்பியல் நோயாளி முக்கியமாக சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று, தலைவலி. திடீரென ஒருவருக்கு 4 முதல் ஒரு வார காலம் தலைவலி ஏற்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் பிரச்னைகள் உடலில் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்ய வேண்டும்.

‘மைக்ரைன், டென்ஷன்’ போன்ற காரணங்களால் நாள்பட்ட தலைவலி ஏற்படலாம். இதுவும்,  திடீரென தொடர்ச்சியாக வரக்கூடிய தலைவலியும் வேறு வேறு. இப்படிப்பட்ட பிரச்னையை சந்திக்க நேரிடும் ஒருவருக்கு மூளையில் இரத்தக் கசிவு அல்லது அடைப்பு அல்லது ஏதேனும் கட்டி உருவாகி அதில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு அதற்கேற்ப சிகிச்சைகள் வழங்க வேண்டும்.

மற்றொன்று, முகத்தில் ஏற்படக்கூடிய மின்னல் வலி. பல் துலக்கும் போதும், சாப்பிடும் போதும், காற்று பட்டாலும் திடீரென இந்த வலி ஏற்படும். இதனால் சில நோயாளிகள் சாப்பிடக்கூட முடியாமல் அவதியடைகின்றனர். முகத்திற்கு மேல் வரும் இரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்படும்போது இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இந்த வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக அறுவை சிகிச்சை அல்லது ‘ரேடியோ ஃப்ரீக்வன்சி’ மூலமாக சிகிச்சை மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் சர்க்கரை வியாதி பலருக்கும் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் நோயாளிக்கு கால் எரிச்சல் அல்லது வலி ஏற்படலாம். இது காலில் ஊசி குத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இவர்கள் காலில் காற்றுபட்டால்கூட வலியை உணர்வார்கள்.  தைராய்டு, கொழுப்பு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களும் கை, கால்களில் எரிச்சலை உணர்வார்கள்.

அடுத்து, கழுத்து வலி மற்றும் முதுகு வலி ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. முறையான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும், திடீரென திரும்புதல், அதிக எடைகள் தூக்கும்போதும், நரம்புகள் மீது அழுத்தம் அதிகரிக்கும்போதும் இந்த வலி ஏற்படுகிறது. இதற்கு முதலில் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். பின்னர் இவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுப்பதன் மூலமாகவும், நல்ல ஓய்வு எடுப்பதன் மூலமாகவும், பிசியோதெரபி சிகிச்சை மூலமாகவும் 90 சதவீத வலியைக் குணப்படுத்திவிடலாம். இதற்கு அடுத்தகட்டமாக அறுவை சிகிச்சை மூலமாகவும் இதற்குத் தீர்வு காண முடியும்

அக்கி என்பது முகத்திலும் உடலில் வேறு பகுதிகளிலும் ஏற்படலாம். அக்கி பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்குத் தாங்க முடியாத வலி ஏற்படும். இது மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை இருக்கும். இதற்கும் மருந்துகளே முதல் சிகிச்சை. மருந்துகளால் பலன் ஏற்படவில்லை என்றால் அடுத்ததாக ‘பேட்ச் ஒட்டி’ சிகிச்சை அளிக்கப்படும். இதற்கடுத்த கட்டமாக ஊசிகள் மூலமாகத் தீர்வு காணலாம்.

நோயாளிகளுக்கான ஆரோக்கிய ஆலோசனைக் குறிப்புகள்:

முதுகு மற்றும் கழுத்து வலி வராமல் இருக்க தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தசைகளுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் செல்வதற்குக்கூட வாகனத்தின் உதவியை நாடிச் செல்ல வேண்டாம், ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்யலாம்.

பொதுவாக, நேரத்தைக் காரணம் காட்டி முதலில் நாம் தவிர்ப்பது உடற்பயிற்சியைத்தான். எனவே, நேரம் இல்லை என்று கூறி தியானம் மற்றும் உடற்பயிற்சியை உங்கள் வாழ்வில் இருந்து ஒதுக்க வேண்டாம். டிவி மற்றும் செல்போனில் மூழ்கி இருக்கும் நேரத்தை சற்றே தவிர்த்தாலே தினமும் உடற்பயிற்சி செய்துவிட முடியும்’ என்றார்.

கண் அழுத்தமா, உடனடி கவனிப்பு தேவை

டாக்டர் மனோஜ் ராமசந்திரன்தலைமை கண் அறுவை சிகிச்சை நிபுணர்

நமது உடம்பில் மிக முக்கியமான உறுப்பு, கண். அதில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள், பாதிப்புகள், அதற்கான தீர்வுகள் குறித்து தலைமை கண் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் மனோஜ் ராமசந்திரன் கூறுகையில்,

‘கண் வலிக்கு முக்கியக் காரணம், கண் அழுத்தம் (Glaucoma) ஆகும். கிளக்கோமா என்பது கண் கோளாறு ஆகும். இது கண்ணின் பின்புறத்தில் உள்ள மூளைக்குத் தகவல்களைக் கொண்டு செல்லும் பார்வை நரம்புக்கு நேரடி சேதத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வைத் திறனில் நிரந்தர இழப்பை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் கண்ணின் அழுத்தம் அதிகரிப்பதால் (கண்ணில் உள்ள திரவம் காரணமாக) மற்றும் மரபு ரீதியாக வரக்கூடியது. கிளக்கோமா பொதுவாக இரண்டு கண்ணிலும் ஏற்படும். ஆனால் சேதத்தின் அளவு மாறுபடலாம்.

கிளக்கோமாவில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. ஓபன் ஆங்கிள் கிளக்கோமா மற்றும் ஆங்கிள் க்ளோஸர் கிளக்கோமா.

ஓபன்- ஆங்கிள் கிளக்கோமா, இது கிளக்கோமாவின் மிகவும் பொதுவான வகையாகும். நாம் 5 நொடிகளுக்கு ஒரு முறை கண்களை சிமிட்டுவதன் மூலம் கண்களில் திரவம் சீராக பரவி, கண்கள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால், இவ்வகை கிளக்கோமா கண் திரவத்தை வெளியேற்றாமல் அடைத்து வைப்பதனால் கண் அழுத்தம் உருவாகி, பின்னர் பார்வை நரம்பை சேதமடைய வைக்கிறது. இந்த வகை கிளக்கோமா வலியற்றது மற்றும் ஆரம்பத்தில் பார்வை மாற்றங்களை ஏற்படுத்தாது. சிலருக்கு சாதாரண கண் அழுத்தத்திற்கு உணர்திறன் கொண்ட பார்வை நரம்புகள் இருக்கலாம்.

அவர்களுக்கு ஆரம்ப கட்டங்களில் எச்சரிக்கை அறிகுறிகள் அல்லது வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இருக்காது. நோய் முற்றும்போது, ​​உங்கள் புற (பக்க) பார்வையில் குருட்டுப் புள்ளிகள் உருவாகின்றன. இது பொதுவான அறிகுறிகளாகும்.

ஆங்கிள்-க்ளோஸர் கிளக்கோமா அரிதானது, ஆனால் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடியது. இந்த வகை கிளக்கோமா கருவிழி வீக்கம் ஏற்படும்போது ஏற்படுகிறது. வீங்கிய கருவிழி பகுதி முழுமையாக வடிகால் கோணத்தைத் தடுக்கிறது. வடிகால் கோணம் முற்றிலும் தடுக்கப்படும்போது திரவம் கண் வழியாக சுற்ற முடியாமல் ​​கண் அழுத்தம் மிக விரைவாக உயர்கிறது. இது அக்கியூட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது. இதனால் கண் பார்வை மங்கல், கடுமையான கண் மற்றும் தலை வலி, பல்புகளைக் காணும்போது வானவில் நிற வளையங்கள் அல்லது ஒளி வட்டங்கள் தெரிவது போன்ற பிரச்னைகள் வருகின்றன. ஆங்கிள்-க்ளோஸர் கிளக்கோமா படிப்படியாக ஏற்படக்கூடும்.

இவை இல்லாமல், விபத்து போன்ற காரணங்களால் ஏற்படக்கூடிய கண் வலிகளும் உண்டு. நமது கண்களுக்குப் பின்னால் ஆப்டிக் என்னும் நரம்பு மூளையையும் கண்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது. நாம் காண்பவை ஆப்டிக் நரம்பு மூலம் மூளையைச் சென்றடைந்து பின்னர் காட்சிகளாக நமக்குத் தென்படுகின்றன.

விபத்து நேரத்தில், இந்த நரம்பில் அடிபட்டால் கண் பார்வையை உடனே இழக்க நேரிடும். இதற்கு சிகிச்சை எதுவும் கிடையாது. எனவே, கண்களை மிகவும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

மேற்கண்ட பிரச்னைகள், அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக எங்கள் கே.ஜி. மருத்துவமனையை அணுகவும். எங்களிடம் உள்ள சிறப்பு வாய்ந்த மல்டி ஸ்பெசாலிட்டி கருவிகள் மற்றும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் உங்கள் பிரச்னைகளுக்கானத் தீர்வுகளை வழங்குவர்’ என்றார்.

சைனஸ், காது வலிக்கு சிறப்பான சிகிச்சை

டாக்டர் கே.பாலகிருஷ்ணன், காது, மூக்கு, தொண்டை அறுவைசிகிச்சை நிபுணர்

காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்தின் மருத்துவ நிலைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் ஓட்டோலரிஞ்ஜாலஜிஸ்ட் அல்லது இ.என்.டி. (ENT) மருத்துவர் ஆவார். உடல் சமநிலைக் கோளாறுகள், தூக்கப் பிரச்னைகள், திடீர் காது கேளாமை, அதிக சத்த பாதிப்பு, நரம்பு வலி, நாள்பட்ட சைனசிடிஸ், ஒற்றைத் தலைவலி, முகத்தில் ஏற்படும் மின்னல் வலி, மெனியர்ஸ் நோய் போன்ற சுற்றோட்ட உள்காது பிரச்னைகள் மற்றும் பிற நரம்பியல் பிரச்னைகளுக்கும் இவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.

வாழ்க்கையை மிகவும் வளமானதாகவும் அற்புதமாகவும் ஆக்கும் சில அடிப்படை செயல்பாடுகள் கேட்பது, பார்ப்பது ஆகும். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை முறையான வழியில் செயல்படவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது, ‘இ.என்.டி. சார்ந்து பல முக வலிகள் வரும். திடீர் முக வலி (அக்கியூட் ஆன்செட்), சில நாட்களாக அல்லது ஒரு வாரமாக திடீரென முகத்தில் வலி இருக்கிறது என்றால் சைனசைடிஸ் (சைனஸ்) ஆகும். சைனசைடிஸ் என்பது உங்கள் சைனஸில் உள்ள திசுக்களின் அலர்ஜியாகும். உங்கள் நெற்றி, கன்னங்கள் மற்றும் மூக்கில் உள்ள இடைவெளிகள் காற்றினால் நிரப்பப்பட்டு அடைப்பு ஏற்படும்போது முக வலி, சளிப் பிடித்தல், மூக்கில் சளி வருதல், தும்மல், தொண்டை வலி, காய்ச்சல், தலை மற்றும் கண் வலி போன்றவை ஏற்படும்.

இ.என்.டி. பரிசோதனை, நாசி பரிசோதனை செய்து மூக்கில் எண்டோஸ்கோப்பி மூலம் சதை வளர்ச்சி அல்லது கட்டிகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை மேற்கொள்ளப்படும். சைனஸுக்கு பொதுவாக சி.டி. ஸ்கேன் எடுக்கப்படும். அதன் பின்னரே அறுவை சிகிச்சையா அல்லது மருந்துகளில் குணப்படுத்த முடியுமா என்பது முடிவு செய்யப்படும்.

கோவிட் காலகட்டத்தில் பெரும்பாலான கோவிட் நோயாளிகளுக்கு ம்யூக்கார் மைக்கோசிஸ் எனப்படும் பூஞ்சைக் காளான் தொற்று முகத்தில் காணப்பட்டன. இதுவும் ஒரு வகையான சைனசைடிஸ் ஆகும். மேலும் இவ்வகையான தொற்று ஏற்பட்டால் முக வலி, நரம்புகளைப் பாதித்து முகம் மரத்துப் போவது போன்றவை உண்டாகும். எந்த ஒரு சைனசைடிஸ்க்கும் சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாமல் போனால் அது கண்களுக்கும் மூளைக்கும் பரவக்கூடும். அதிர்ஷ்டவசமாக, இது ஒரு சதவீதம் மக்களுக்கு மட்டுமே ஏற்படும்.

இந்நோய், 10 ல் 8 பேருக்கு மருந்துகளின் மூலமாகவே குணமாகிவிடும். சிலருக்கு மட்டுமே அறுவைசிகிச்சை செய்யப்படும். எனவே இந்த மாதிரியான சூழல் ஏற்பட்டால் உடனடியாக இ.என்.டி. மருத்துவரை அணுகவும்.

அடுத்து, மற்றொரு வகையான முக வலி Atypical facial pain (AFP) ஆகும். இந்த வித்தியாசமான முக வலி, உங்கள் முகம் அல்லது வாயில் ஏற்படும் நாள்பட்ட வலியாகும். இது தொடர்ச்சியான இடியோபாத்திக் முக வலி (PIFP) என்றும் அழைக்கப்படுகிறது. எப்பொழுதும் இருக்கும் வலியைவிட வித்தியாசமாக இருப்பதனால் இதை வித்தியாசமான முக வலி எனக் கூறுகிறோம். இது ஒரு வகையான ஒற்றைத் தலைவலியின் மாறுபாடாகும். அக்கியூட் ஆன்செட் மற்றும் எடிபிக்கல் பேஷியல் பெயின் ஆகிய இரண்டும் முக வலியின் இரு பிரிவுகளாகும்.

அடுத்தது, காது தொற்று அல்லது அலர்ஜி. இது, பொதுவாக பாக்டீரியா அல்லது வைரஸ்களால் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு மற்ற காரணங்களில் ஒவ்வாமை, சைனஸ் நோய்த்தொற்றுகள், பல் நோய்த்தொற்றுகள், காது மெழுகு அதிகரிப்பு, உயர மாற்றங்கள் மற்றும் டெம்போரோமாண்டிபுலர் மூட்டு (TMJ) நோய்க்குறி ஆகியவை அடங்கும். காது வலியானது அக்கியூட் இயர் இன்பெக்சன் மற்றும் க்ரானிக் இன்பெக்சன் என இரு மாறுபாடுகளில் வரும். காதில் வெளிப்புறக் காது, நடுத்தரக் காது, உள் காது என மூன்று பிரிவுகள் உண்டு.

வெளிப்புற காது தொற்று அலர்ஜி (Ottitis Externa) அல்லது சிவத்தல் மற்றும் வீக்கம் ஏற்படுத்தும் ஒரு நிலை. இது வெளிப்புற காது மற்றும் செவிப்பறைக்கு இடையில் உள்ள குழாய் ஆகும். ஓட்டிஸ் எக்ஸ்டெர்னா பெரும்பாலும் “நீச்சல் காது” என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் மீண்டும் மீண்டும் காதில் தண்ணீர் வெளிப்படுவது, காது வலியை வீக்கத்திற்கு ஆளாக்கும்.

காது நோய்த்தொற்று (Otitis Media) என்பது காதுகளின் சிறிய அதிர்வுறும் எலும்புகளைக் கொண்ட செவிப்பறைக்குப் பின்னால் காற்று நிரப்பப்பட்ட இடமான நடுத்தரக் காதில் ஏற்படும் தொற்று ஆகும். பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு நடுத்தரக் காது தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். காது நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் தானாகவே சரிசெய்யப்படுவதால், வலியை நிர்வகித்தல் மற்றும் சிக்கலைக் கண்காணிப்பதன் மூலம் சிகிச்சை தொடங்கும். சில நேரங்களில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொற்றுநோயை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

உள்காது தொற்று அல்லது அலர்ஜி (Otitis Interna) என்பது, உள் காது நோய்த் தொற்றுகளைக் குறிக்கும். இதன் முக்கிய இரண்டு வகைகள் லேபிரிந்திடிஸ் மற்றும் வெஸ்டிபுலர் நியூரிடிஸ் ஆகும். இந்த இரண்டு உள் காது நோய்த்தொற்றுகளும் தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் உட்பட பல அறிகுறிகளை ஏற்படுத்தும். லாபிரிந்திடிஸ் உங்கள் காதுக்குள் ஆழமான, ஒரு நுட்பமான கட்டமைப்பை ஏற்படுத்துகிறது. இது லேபிரிந்த் என்று அழைக்கப்படுகிறது. லேபிரிந்திடிஸ் உள்ள ஒரு நபர் கேட்கும் பிரச்னைகளையும் சந்திக்கலாம்.

இவ்வாறான பிரச்னைகளை சந்திப்பவர்கள் எங்கள் கே.ஜி. மருத்துவமனைக்கு வாருங்கள். நாங்கள் எங்களது மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் திறமையான மருத்துவக் குழுவை கொண்டு உங்களது பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கண்டு சிகிச்சை அளிக்கின்றோம்’ என்றார்.

மனநலம் காத்தால் மன வலி இல்லை!

டாக்டர் பொன்னி முரளிதரன், மன நல மருத்துவர்

மன வலி குறித்தும் அதனைக் கையாள்வது குறித்தும் கே.ஜி. மருத்துவமனையின் மன நல மருத்துவர் பொன்னி முரளிதரன் கூறுகையில்,

‘பொதுவாகவே நாம் ‘வலி’ என்றதும் தலை வலி, கால் வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி ஆகிய வலிகளைத்தான் நினைப்போம். ஆனால், நம்மை அதிகம் பாதிக்கக்கூடிய மற்றொரு வலியும் இருக்கிறது. அதுதான் ‘மன வலி’.

மனம் என்பது பூவைப் போன்று மென்மையானது. எப்போதும் மனம் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியோடும் இருக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால், மன வலியை ஏற்படுத்தும் விஷயங்களும் சூழ்நிலைகளும் கட்டாயம் ஏற்படும். இதை எவ்வாறு நாம் கையாள்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.

மன வலி என்பது மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தால் ஏற்படும் ஒரு விளைவு. அதாவது நமது மூளையில் உற்பத்தியாகும் இரசாயனங்களின் விகித அளவு மாற்றங்களை மன வலி என்கிறோம். குறிப்பாக, நமது உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் வலியை நமக்கு உணரச் செய்வதே இந்த மூளைதான். எனவே, மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதை சரி செய்வது மிகவும் அவசியமாகும்.

மன வலி – டீனேஜ், பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு. குறிப்பாக, 17 அல்லது 18 வயதுடைய பதின் பருவத்தினருக்கு இந்த மன வலி அதிகமாகவே ஏற்படும். காரணம், அந்த பருவத்தில்தான் அவர்கள் தேர்வு போன்ற கடினமான விஷயங்களைப் புதிதாக எதிர்கொள்ள வேண்டும். அதை சுலபமாகக் கையாள்பவர்களும் உள்ளனர். அதேநேரத்தில் அதனை ஒரு சுமை என கருதி மன அழுத்தம் அடையும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மனநல ஆலோசனைகளைக் கட்டாயம் வழங்க வேண்டும். பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் மனநல மருத்துவர்களைக் கட்டாயம் அணுக வேண்டும்.

இதனைச் செய்யவில்லை என்றால் அவர்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த வயதில் பெற்றோர் சொல்வதைவிட நண்பர்களும் மற்றவர்களும் சொல்வதே தனக்கு நல்லது என அவர்களுக்குத் தோன்றும். இதனால் பலரும் புகை, மது ஆகிய போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இளைஞர்கள் மட்டுமின்றி வேலைப்பளுக் காரணமாகவும் குடும்பச் சூழல் காரணமாகவும் ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் மன வலி பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

கவலைகளை மறப்பதற்காக போதைப் பழக்கத்தைத் துவங்கினால் அது நாளடைவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, நமது மனநிலையில் ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்துகொண்டு அதற்குண்டானத் தீர்வுகளைத் தேட வேண்டும்.

முதியவர்களைப் பொறுத்தவரை சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு ஆகியவை ஏற்பட்டதும், இயல்பாகவே அவர்களது உடல் நிலையை எண்ணி மன அழுத்தம் ஏற்படும். இவர்களும் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

நமது கே.ஜி. மருத்துவமனையில் மனநல பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க ஒருங்கிணைந்த அனுபவமிக்க மருத்துவக் குழுவினர் உள்ளனர். டீனேஜ் முதல் முதியவர்கள் வரை மனவலிக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப மன நல ஆலோசனைகள், மாத்திரைகள், பயிற்சிகள் வழங்கப்பட்டு சிறப்பான முறையில் மனநல ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது’ என்றார்.

அளவுக்கு மீறினால் உடற்பயிற்சியும் நஞ்சு!

மோகன் காந்தி பிசியோதெரபிஸ்ட்

கே.ஜி. மருத்துவமனையின் பிசியோதெரபிஸ்ட் மோகன் காந்தி வலிகள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் கூறியதாவது,

‘வலிகளில் முக்கியமாக கழுத்து வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி, முழங்கால் வலி ஆகிய  நான்கும் மிக முக்கியமானதாகும். ஒரு நாளைக்கு இந்த வலிகளால் பாதிக்கப்பட்ட 25 முதல் 30 நோயாளிகள் வரை என்னைச் சந்திக்கின்றனர். அவர்கள் அனைவரும் பல்வேறு விதமான வலிகள் காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வருகின்றனர்.

வயது ஆகும்போது எலும்பில் ஏற்படக்கூடிய மாற்றம், தசையில் ஏற்படும் மாற்றம், வேலை செய்யும்பொழுது ஏற்படக்கூடிய மாற்றம், சத்துக் குறைவினால் ஏற்படக்கூடிய மாற்றம் என வலிகளுக்கான காரணத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

மேலும், உட்காரக்கூடாத தோரணையில் அமர்ந்து வேலை செய்வது, தொடர்ந்து கழுத்தை ஆட்டாமல் குனிந்தபடி செல்போன் பார்த்துக் கொண்டிருப்பது, டயாபட்டிக் பேஷண்டுகளுக்கான  பல்வேறு விதமான வலிகள், தன் உடல் அளவு, சக்திக்கும் அதிகமாக விளையாடுவது, Warm up செய்யாமலே விளையாடத் தொடங்குவது என வலி வருவதற்கான காரணங்கள் விரிவடைகிறது. நாம் என்ன செயல் செய்கிறோமோ, அதாவது உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, கராத்தே, யோகா, விளையாட்டு என எதை செய்ய நினைக்கிறோமோ அதற்கு ஏற்றார்போல, நமது தசைகளையும் எலும்புகளையும் தளர்த்தும் சிறிய பயிற்சிகளை முதலில் செய்துவிட்டு, பின்னர் அந்தக் காரியத்தை செய்தால் வலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

நடைப்பயிற்சி செல்லக் கூடியவர்கள் முதல் ஐந்து நிமிடங்கள் மெதுவாக நடக்க வேண்டும். அடுத்து 10 நிமிடங்கள் வேகமாக நடக்கலாம். பயிற்சி முடிக்கும்பொழுது 5 நிமிடங்கள் மெதுவாக நடக்க வேண்டும். விளையாட்டோ, உடற்பயிற்சி என எதுவாக இருந்தாலும் அதற்கு முன்பாக வாம் அப் செய்வது மிகவும் அவசியம். அதேபோல் உடற்பயிற்சி முடிந்தவுடன் வாம் டவுன் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் வேகமாகத் துடிக்கும் இதயத் துடிப்பை சீராகக் குறைக்க முடியும். அதுவே வாம் டவுன் செய்யாவிட்டால் உடல் சோர்வு ஏற்பட்டு மயக்க நிலை ஏற்படலாம்.

அத்துடன், 40 நிமிடம் மட்டுமே நடக்கக்கூடிய ஆற்றல் பெற்ற ஒருவர், தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் நடந்தால் அவருக்கு வலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இதேபோல, தமக்குத் தெரியாத விஷயங்களை முறைப்படித் தெரிந்துகொள்ளாமல் செய்வது மற்றும் கழுத்து வலி, முதுகுத் தண்டுவட வலி, தொடர்ந்து கணினி மௌசை இயக்கும்போது விரல்களில் ஏற்படக்கூடிய வலிகள் எனப் பல்வேறு விதமான வலிகளுக்கு கணினித்துறையில் பணிபுரிபவர்கள் ஆளாகிறார்கள். சிலருக்குத் தும்மும்போதோ, இருமும்போதோ, பாத்ரூமில் லேசாக வழுக்கும்போதோ தசைப்பிடிப்பு, எலும்பு வலிகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

முக்கியமாக, மூட்டு வலி பலரையும் வாட்டி வதைக்கிறது. வயதானவர்கள் முட்டி வலி வருவதற்குக் காரணம், எலும்புத் தேய்மானம், வயது முதுமை. இளம் வயதில் முட்டி வலி வருவதற்கு காரணம், இளம்பெண்கள் ஹை-ஹீல்ஸ் அணிந்து நடப்பது, செய்யக்கூடாத விஷயத்தைத் தெரியாமல் செய்வது போன்றவையாகும். இதுபோன்ற காரணங்களால் முட்டி வலி அதிகமாக வருகிறது.

அடுத்ததாக, தோள்பட்டை வலி. கழுத்து வலி, சோல்டர் வலி உள்ளவர்களுக்கு எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் மூலமாக அதன் தன்மையைத் தெரிந்துகொண்டு மருந்து, உடற்பயிற்சி, பிசியோதெரபி ஆகியவற்றின் மூலமாக படிப்படியாக வலிகளைக் குணப்படுத்தலாம். எந்த சூழ்நிலையிலும் வலி வருவதை சாதாரணமாக நினைக்காமல், உடனடியாக தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் நாம் வலிகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்’ என்றார்.