வரும் நாட்களில் திருப்பூர் பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படும் வானிலை ஆய்வு மையம்.

இந்த வாரம் திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் மழை பெய்வதற்கு வாய்ப்புண்டு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை துறையின் கோவை வேளாண்மை காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கை விவரம் வருமாறு:-

வரும் நாட்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மிதமானது முதல் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை, 34 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியசாக இருக்கும்.

காலையில் காற்றின் ஈரப்பதம் 75 சதவீதமாகவும், மாலையில் 55 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 10 முதல் 12 கி.மீ., வேகத்தில் இருக்கும். மழை எதிர்பார்க்கப்படுவதால் கால்நடைகளை பாதுகாக்க கொட்டகைக்குள் அவற்றை கட்டி வைக்க வேண்டும். கால்நடை குடில்களுக்கு உட்புறமும், அதனை சுற்றி தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பதன் வாயிலாக கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது