
நீலகிரி மாவட்டம் கூடலூர்-ஊட்டி சாலையில் கூடலூர் நடுவட்டம் இடையே 26-வது மைலில் ஊசிமலை காட்சி முனை உள்ளது. சீசன் காலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த காட்சி முனைக்கு வந்து செல்வது வாடிக்கை. சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இந்த பகுதிக்கு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்தனர்.
அவர்கள் காட்சி முனை பகுதியில் இருந்து கூடலூர் நகர பள்ளத்தாக்கு மற்றும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி, தவளை மலை காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர்.
மேலும் இதன் அருகே உள்ள யூகலிப்டஸ் கற்பூர மரசோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அதனையும் பார்த்து ரசித்தனர். மரங்களின் நடுவில் ஊடுறுவி வரும் சூரிய கதிர்களின் வெளிச்சத்தில் வானுயரந்து நிற்றும் மரங்களின் பின்னனியில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.