மக்கள் குறை தீர்வு மனுக்களும், அதன் தீர்வும்…

கோவையில் வாரம் தோறும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறுகிறது. வாரத்தின் முதல் நா|ள் திங்கள்கிழமை காலை தொடங்கி மதியம் 2 மணி வரை மாவட்ட கலெக்டர் தலைமையில் மனுக்கள் பெறப்படும். இதில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தாலுகாக்கள், ஊர்களில் இருந்து தங்களுக்கு உள்ள குறையை கலெக்டரிடம் மனுக்களாக மக்கள் அளிப்பர்.

இதில் முதியோர் பென்ஷன், வீட்டுமனை பட்டா, வேலை கேட்டு, மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், திருமண உதவித்தொகை, இடப் பிரச்சினைகள், கல்வி உதவித்தொகை, கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகை, கந்துவட்டி கொடுமை, கலப்புத் திருமணம் உதவித்தொகை, குடும்ப பிரச்சனை, ஆதரவற்றோர் உதவித்தொகை, வரதட்சணை கொடுமை, விவசாயிகள் கோரிக்கை என பல்வேறு மனுக்கள் கொடுக்கப்படுகிறது.

இந்த குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்டிஓ, அனைத்து தாலுகா தாசில்தார்கள், காவல் துறையின் உயரதிகாரிகள் என அனைத்து அரசு உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். கலெக்டர் மனுக்களை பெற்று கையெழுத்திட்டு அந்தந்த துறை அதிகாரியிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்.

அதை அதிகாரிகள் பெற்று கொள்வார்கள் நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் கூறப்படும் மக்களும் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டோம் என மன மகிழ்ச்சியுடன் செல்வார்கள் இந்த மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு ஏற்படுகிறதா? மனுக்கள் கடைசியில் எங்கே செல்கிறது என்பதை மக்கள் எவ்வாறு தெரிந்து கொள்வது.

அரசியல் கட்சியினர் படித்தவர்கள் ஒரு சிலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தன்னுடைய மனு யாரிடம் உள்ளது தீர்வை தெரிந்து கொள்கின்றன.

இது குறித்து மனு அளிக்க வந்த கிராமப்புற மக்களிடம் கேட்டபோது
அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் வீட்டுமனை பட்டா கேட்டு 5-வது முறையாக மனு அளித்துள்ளேன் எப்படியாவது இடம் கிடைத்தால் சரி இதுவரை எங்கள் ஊருக்கு வந்து அதிகாரிகள் யாரும் விசாரிக்கவில்லை. ஒரே கோரிக்கைக்காக மனு தொடர்ந்து கொடுத்துக் கொண்டு உள்ளேன். எங்கள் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பதை அதிகாரிகள் நாங்கள் அறிந்து கொள்ளும்படி எளிமையாக்கினால் நல்லா இருக்கும் என்றார்.

பாமர மக்கள் ஒரே கோரிக்கையான மனுவை தொடர்ந்து கொடுத்துக் வருகின்றன. பணம் செலவு செய்து, உடல் அலச்சல் ஏற்பட்டு வாரந்தோறும் வருவது பரிதாபமாக உள்ளது.

அதிகாரிகள் எளிமைப்படுத்தி அவர்களுக்கு மனுவின் நிலையை அறிய உதவினால் நன்றாக இருக்கும்.