எஸ்.என்.எஸ். கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா

டாக்டர் எஸ்.என்.எஸ். கல்வியியல் கல்லூரியில் 16வது ஆண்டு விழா புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை வன பாதுகாவலர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்வின் துவக்கத்தில், சிறப்பு விருந்தினர் செந்தில்குமார், எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வியியல் கல்லூரியில் முதல்வர் மேரி நோய லீனா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்வினை துவக்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் மேரி நோய லீனா கல்லூரியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார். பின்னர், நளின் விமல் குமார் தலைமை உரையாற்றினார்.

அதில், மாணவ ஆசிரியர்கள் தங்களின் கற்றல் கற்பித்தல் திறனை இன்றைய தொழில்நுட்ப உலகுக்கு ஏற்ப புதுமையான முறையில் மேற்கொள்ளவும் மகிழ்ச்சியான கற்றல் சூழலை உருவாக்கிக் கொள்ளுமாறும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் செந்தில்குமார் பேசுகையில், இன்றைய நவீன யுகத்திற்கு தகுந்தார் போல் கற்றலில் புதுமையை ஏற்படுத்தி கற்பிக்குமாறும், மேலைநாட்டு கற்பித்தலுக்கும் நம் நாட்டு கற்பித்தலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கினார்.

இவ்விழாவின் அடுத்த கட்ட நிகழ்ச்சியாக விளையாட்டு மற்றும் மன்ற செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், எஸ்.என்.எஸ். கல்வியியல் கல்லூரியில் சிறந்த மாணவராக இரண்டாம் ஆண்டு மாணவி ஷிபானி மற்றும் அனைத்திலும் தனித் திறமையுடன் விளங்கிய முதலாம் ஆண்டு மாணவி மோனிஷா ஆகியோருக்கும் எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனத்தின் சார்பாக விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.