இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விடுதலை.

மத வெறுப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகதீசனார் ஆகியோர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கின் முதல் தகவல் அறிக்கை எண்: 414/2014 கோவை வெறைட்டி ஹால் காவல் நிலையம் பி. 8 ஆகும்.

வழக்கின் விசாரணை கோவை ஜே எம் 5 நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

2014 ஆம் ஆண்டு ஏழாவது மாதம் 12-ஆம் தேதி கோவை மாநகரத்துக்கு உட்பட்ட மா.ந.க. வீதி,உத்தண்ட மாரியம்மன் கோயில் திடலில் இந்து மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேற்படி பொதுக்கூட்டம் முஸ்லிம் மத வெறுப்புணர்வு பேச்சு பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையினரால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அர்ஜுன் சம்பத் அவர்கள் மேடையில் இருந்த பொழுது கொள்கை பரப்பு செயலாளர் ஜெகதீசன் அவர்கள் மதவெறுப்பு பேச்சு பேசியதாக கூட்டம் நிறுத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீதி மாணிக்கம் தலைமை வகித்து இருந்தார்.

இது சம்பந்தமாக அப்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே இந்து மக்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெகதீசனார் காலமாகிவிட்டார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அர்ஜுன் சம்பத் தூண்டிவிட்டு தான் ஜெகதீசனார் இப்படி பேசினார் என்று அர்ஜுன் சம்பத் மீது மத வெறுப்பு பேச்சுக்கு தூண்டுதல், மற்றும் உடந்தையாக இருத்தல், உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு, 30/05/2023 இன்று கோவை ஜெ.எம். 5 நடுவர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கிலிருந்து அர்ஜுன் சம்பத்தை விடுதலை செய்து ஜெ.எம்.5 நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

தமிழகம் முழுவதும் இந்து சமய மக்களின் உரிமைக்கும் நலனுக்கும் குரல் கொடுத்து பல ஜனநாயக அறப்போராட்டங்களை சட்டத்துக்கு உட்பட்டு நடத்திவரும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது பல வழக்குகள் திமுக ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்குகள் எல்லாம் அரசியல் பழி வாங்கும் உள்நோக்கத்துடன் தற்போதைய திராவிட மாடல் ஆட்சி விசாரணை செய்து,இழுத்தடித்து, அலைகழித்து, எப்படியாவது அர்ஜுன் சம்பத் உடைய சுற்றுப்பயணத்தை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.

தற்பொழுது இந்த வழக்கிலிருந்து இது பொய் வழக்கு என விடுதலையானது குறித்து அர்ஜுன் சம்பத் மகிழ்ச்சி தெரிவித்தார். இனிமேலாவது இந்து அமைப்புகள் மீது பொய் வழக்கு போடுவதை அரசாங்கமும் காவல்துறையும் கைவிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.