கே.பி.ஆர். பொறியியல் கல்லூரிக்கு ரஷ்ய நாட்டின் தென்னிந்தியாவுக்கான கன்சல் ஜெனரல் வருகை!

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், ரஷ்யா நாட்டின் தென்னிந்தியாவிற்கான தூதரகத்தின் கன்சல் ஜெனரல் ஒலெக் அவ்தீவ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை முன்னிறுத்தி, ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் ஒலெக் அவ்தீவ் கலந்துரையாடினார்.

இதில் ஒலெக் அவ்தீவ் பேசும்போது கூறியதாவது, ரஷ்யாவில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் பற்றியும், குறிப்பாக கல்வி, கல்வி உதவித்தொகை, பரிமாற்ற திட்டங்கள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவு ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புகளை எடுத்துரைத்தார்.

மேலும் அவரது மாணவர்களுடனான கலந்துரையாடலில் ரஷ்யாவில், இந்திய மாணவர்களுக்கான ஏராளமான வாய்ப்புகள் மற்றும் அது பற்றிய மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்தது.

இந்த நிகழ்வில் ஒலெக் அவ்தீவ் அவர்களுடன், ரஷ்யா – இந்தியா தொழில் வர்த்தக சபையின் பொதுச்செயலாளர் தங்கப்பன், இந்து தமிழ் திசையின் பொது மேலாளர், ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், கே.பி.ஆர். கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் அணைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.