தேர்தல் வாக்குறுதிகள் 85 சதவீதம் நிறைவேற்றம் செந்தில் பாலாஜி.

கோவை மே 29-

வால்பாறை, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்நடைபெற்ற கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் ரூ.30.30 கோடி மதிப்பீட்டில் 4 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.13.55 கோடி மதிப்பீட்டில்முடிவுற்ற 7 பணிகளை தொடங்கி வைத்து, 111 பயனாளிகளுக்கு ரூ.39.11 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்டஉதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, வால்பாறை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி, நகராட்சி ஆணையாளர் (பொ)வெங்கடாசலம், நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் கோழிக்கடை கணேசன் மற்றும் வால்பாறை நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில்மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:-

வால்பாறையில் கோடைவிழா பல ஆண்டுகளுக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தற்போது நடைபெறு கின்றது. அரசின் திட்டங்கள் மட்டுமல்லாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விழாக்க ளையும் நடத்தும் அரசாக திகழ்கின்றது.

இனிமேல் வால்பாறை கோடைவிழா ஆண்டுதோறும் நடத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. தேர்தலில்கொ டுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை இந்த இரண்டு ஆண்டுகளிலே நிறைவேற்றி உள்ளது. வால்பாறை நகராட்சிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் உள்பட கோவை மாவட்டத்திற்கு அனைத்து வளர்ச்சித்திட்டங்களை வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ரூ.9000கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள். மேலும், இல்லதரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சரால் தொடங்கப்பட உள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி வால்பாறை பகுதியில் புறநகர்ப்பேருந்துகள் தான் அதிகமாக வருகின்றன. சாதாரண நகரபேருந்துகள் குறைவாகவே வருவதால்ந கரபேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் என்பது இப்பகுதியில் செயல்படுத்தமுடியாத சூழ்நிலை இருந்து வருகினறது.

இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இப்பகுதி மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.