கோவையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி.

குனியமுத்தூர், தமிழகத்தில் கடந்த சித்திரை மாத இறுதியில் இருந்து தற்போது வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமா கவே காணப்ப டுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வருவதே கிடையாது.

அத்தியாவசிய தேவை யாக இருந்தாலும், வெயிலின் உஷ்ணம் குறைந்த பிறகே வெளியில் வருகின்றனர். அந்தளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரமும் முடிந்து விட்டாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

வீடுகளில் மின்விசிறி, ஏசி போன்ற எதுவும் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது.

மேலும் பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், பதநீர், மோர், பழவகைகள் போன்ற குளிர்ச்சியான ஆகாரங்க ளை உணவாக எடுத்து கொண்டு வருகி ன்றனர்.

இதுகுறித்து கோவையை சேர்ந்த இல்லத்தரசிகள் கூறியதாவது:- வருடா வருடம் அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது வெயில் தாக்கம் அதிகமாகி வருவது இயற்கை. ஆனால் இந்த வருடம் மிகவும் அதிகமாக உள்ளது.

வீட்டில் மின்விசிறி இல்லாமல் உட்கார முடியாத சூழ்நிலை உள்ளது. இரவு நேரங்களில் மின்விசிறி இயங்கினால் கூட வெப்ப காற்று தான் வருகிறது. இதனை தவிர்த்து மொட்டை மாடியில் படுத்தால் கூட வெப்ப காற்று தான் வீசுகிறது. அவ்வப்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது.

ஆனாலும் அது ஒரு சில நாட்கள் தான். மீதி அனைத்து நாட்களிலும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவதிப்ப ட்டு வருகிறோம். கடும் வெயில் காரணமாக குழந்தைகளுக்கு வியர்வை வேர்த்து ஊற்றுகிறது.

இதனால் குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற நோய்களும் ஏற்படுகிறது. கடும் வெயில் காரணமாக தினமும் 2 நேரம் குளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் அதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு என்ற சூழ்நிலை உள்ளது. மிகவும் இக்க ட்டான சூழலில் உள்ளோம். ஆகவே விரைவில் இந்த வெயிலின் தாக்கம் குறைந்து வழக்க மான சூழ்நிலை ஏற்பட்டால் அனைவருக்கும் நல்லதாக சூழ்நிலை அமையும் என்று கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.