கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் அதிநவீன மையம் துவக்கம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மோட்ரொப் (MODROB) திட்டத்தின் ஒரு பகுதியாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் நிதி உதவி மூலம், ஸ்மார்ட் ஆன்டனா அமைப்புகள் மற்றும் அளவீடுகளுக்கான அதிநவீன மையம் துவக்கப்பட்டுள்ளது.

இதனுடைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பெங்களூரு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி செல்வநாயகி, கல்லூரியின் முதல்வர் அகிலா, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் தலைவர் இந்திரா ஆகியோர் தலைமை தாங்கினார்.

இந்த மையம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையமாக செயல்படும். சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் வளங்களைக் கொண்டு, வயர்லெஸ் தகவல் தொடர்புகளின் சாத்தியங்களை மாணவர்களும் ஆசிரியர்களும் அறிவதற்கான வாய்ப்பை இம்மையம் அமைத்துத் தரும்.