எங்கள் வீட்டில் சோதனை நடைபெறவில்லை செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை மே 26-

சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் மின்சார மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை நடைபெற்ற சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இருந்தார். ஆனால் அவரது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. அவர் வழக்கம்போல் சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சம்பந்தமான ஆய்வு கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது.

இதில் மேலாண்மை இயக்குனர் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட மேலாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் செந்தில் பாலாஜி வந்தபோது ஐ.டி. சோதனை குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், என்னுடைய வீடுகளில் சோதனை எதுவும் நடக்கவில்லை.

என் தம்பி மற்றும் அவருடைய நண்பர்கள், தெரிந்தவர்களின் வீடுகளில் அலுவலகங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது. அதைப்பற்றி நான் இப்போது பேசுவது சரியாக இருக்காது என்று கூறிவிட்டு கூலாக கடந்து சென்றார்.