மகா மாரியம்மன் கும்பாபிஷேக விழா

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார பூஜைகள், அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், இந்துச மய அறநிலைத்துறை, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர். மேலும் மருத்துவக்குழுவினர், காவல்துறை, தீயணைப்புதுறை என அனைவரும் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.