ஆண்களுக்காக வாக்கரூ அறிமுகம் செய்யும் புதிய வகை பிரீமியம் ரக காலணிகள் வாக்கரூ ப்ளஸ்

இந்தியாவில் காலணி தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் வாக்கரூ, ஆண்களுக்கான மிகவும் நேர்த்தியாக மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட புதிய வகை ‘வாக்கரூ ப்ளஸ்’ காலணிகளை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் நீண்ட நாட்கள் உழைக்கும் தன்மை, சிறந்த தரம் ஆகியவற்றுடன் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இவை உள்ளன.

புதிய காலணிகள் அறிமுகம் குறித்து வாக்கரூ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நௌஷாத் கூறுகையில், எங்களின் புதிய வாக்கரூ ப்ளஸ், காலணித் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் குறைந்த விலையில் பிரீமியம் ரக காலணிகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவைகளை இவை நிச்சயம் பூர்த்தி செய்யும். இந்த புதிய ரக காலணிகளை நாங்கள் அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த புதிய ரகங்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களின் நிபுணத்துவமிக்க வடிவமைப்பு குழு ஒவ்வொரு காலணியையும் மிகுந்த கவனத்துடன் மிகவும் நுணுக்கமாக வடிவமைத்துள்ளது, அத்துடன் இவை நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இது குறித்து வாக்கரூ நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் குரியன் கூறுகையில், தற்போதைய காலணி சந்தையைப் பொறுத்தவரை குறைந்த விலையில் பிரீமியம் தர காலணிகளை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். போட்டி நிறைந்த காலணி சந்தையில் எங்களை நிலைநிறுத்திக் கொள்ள எங்களின் புதிய வாக்கரூ ப்ளஸ் காலணிகள் அதிநவீன வடிவமைப்பு மற்றும் பிரீமியம் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இவை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும். எங்களின் பல்வேறு வகையான காலணிகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் சூழலில், வாக்கரூ ப்ளஸ் காலணிகளுக்கு கேரளாவில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை காலணிகள் உங்களின் நடைபயணத்திற்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதோடு, குறைந்த விலையில் பிரீமியம் தரத்தையும் கொண்டுள்ளது. இந்த புதிய காலணி ரகங்களை இந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தார்.