காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் துவக்கம்

கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தனர். இதில் பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி வழங்கப்பட்டது.