குமரகுரு கல்லூரியில் விண்வெளி துறை குறித்த கருத்தரங்கு

குமரகுரு கல்வி நிறுவனமானது, கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பாதுகாப்பு துறை சார்ந்த தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளை ஆதரித்து வந்தது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தில், பாதுகாப்புத்துறை மற்றும் வான்வெளி தொழில் சார்ந்த, உள்நாட்டு உற்பத்தியை ஊக்கவிக்கும் விதமாக கருத்தரங்கம் வியாழக்கிழமை நடத்தி இருக்கிறது.

இக்கருத்தரங்கம், இந்திய ராணுவ துறையின் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கூட்டமைப்பு (SIDM), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (TIDCO) இணைந்து குமரகுரு கல்வி நிறுவனங்களில் நடத்தியது.

இக்கருத்தரங்கின் அடிப்படை நோக்கம், தமிழகத்தின் மேற்கு மாவட்டம், குறிப்பாக கோவையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள், பாதுகாப்புத் துறைசார்ந்த நிறுவனங்களில் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பல்வேறு வாய்ப்புகளை அறிந்துகொண்டு, இந்த வாய்ப்பை பயன்படுத்தி இராணுவ தளவாடங்களின் உற்பத்தியை துவங்க வேண்டும் என்பதற்காகவும். அது மட்டுமல்லாது, இந்நிறுவனங்கள், ராணுவ துறைகளை மற்றும் வான்வழித்துறை சார்ந்த தளவாடங்களின் உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இம்முயற்சியின் பயனாக, தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடமானது, ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகல வாய்ப்பாக அமையும்.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் சிறப்புசெயலர் மற்றும் திட்ட இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.ஐ.டி.எம்-ன் தமிழ்நாடு கிளை தலைவர் ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இக்கருத்தரங்கத்தில் 150 தொழில் நிறுவனங்களில் மற்றும் ஏழு கல்லூரிகளிலும் இருந்து பங்கேற்றுள்ளனர்.