சென்னை அணிக்கு PLAYOFF சிக்கல்!! அடுத்துவரும் போட்டிகளில் நடக்கக்கூடாதது

16 வது ஐபிஎல் T20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய பத்து போட்டிகளில் 5ல் வெற்றி 5ல் தோல்வி என 11 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

சென்னையின் நெட் ரன் ரேட் +0.329 ஆகவும் உள்ளது. கடைசியாக நடந்த சென்னை மற்றும் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை குறிக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்நிலையில் கோப்பைக்காக பத்து அணிகளும் போராடுவதால் PLAYOFF சுற்றிற்கு தகுதி பெறுவதற்கான சூழ்நிலையும் கடினமாகி விட்டது. எனவே சென்னை அணி PLAYOFF சுற்றிற்கு தகுதி பெற எதிர்கொள்ள இருக்கும் போட்டிகள் மிகவும் கடினமாக இருக்கும்.

தற்போது நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணி PLAYOFF சுற்றிற்கு பெற உள்ள வாய்ப்புகளை பற்றி பார்க்கலாம்,

அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை பத்து போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. மேலும் சென்னை அணி அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. இவர்களின் கடைசி 3 ஆட்டங்கள் டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு எதிராக 2 முறையும் கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு முறையும் நடக்க உள்ளன.

இரு அணிகளும் தற்போது புள்ளி பட்டியலில் கீழ் பாதியில் உள்ளன. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் PLAYOFF சுற்றிற்கு தகுதி பெற குறைந்த பட்சம் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். மூன்று வெற்றிகளுடன் சென்னை அணி 17 புள்ளிகளை எட்டுவார்கள். அது முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்கு போதுமானதாக இருக்கும் .

கடைசி நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட அவர்களால் PLAYOFF வாய்ப்பை பெற முடியும். ஆனால் அதுவும் மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்தே அமையும்.