தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்-  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பேட்டி

கோவையில் மக்கள் நீதி மையத்தின் பயிலரங்கம் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு கமலஹாசன் பேட்டி அளித்தார் . இந்த பயிலரங்கில் பல துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் முறை குறித்து பயிற்சி அளித்தனர் எனவும்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்பின்  பிரச்சார ஆலோகர் அவினாஷ் கலந்து கொண்டு பயிற்சி அளித்துள்ளதாகவும் தெரிவித்த கமல்ஹாசன் இதுபோன்ற பயிற்சிமுகாம்கள் தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.இதில் தேர்தலை எதிர் கொள்ளும்   முறை உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது என தெரிவித்தார். பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது தங்களின் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார். பா.ஜ.கவினர் கருத்திற்கு எதிர் கருத்து சொல்ல கூடாது என நினைக்கின்றனர், அது ஜனநாயக நாட்டில் ஒத்து வராத ஒரு விஷயம் எனவும்  அவர் தெரிவித்தார். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடை தேர்தலில் கலந்து கொள்ள போவதில்லை எனவும், தேர்தலை உன்னிப்பாக கவனிப்போம், விமர்சிப்போம், மக்களுக்கு நல்லதை சொல்வோம் என தெரிவித்த அவர், இதைவிட பெரிய தேர்தல்களம் வருவதால் அதற்கு  தயாராகி வருகின்றோம் எனவும், உள்ளாட்சி தேர்தலில் தலையிட வேண்டாம் என நினைக்கின்றோம் எனவும் கமலஹாசன் தெரிவித்தார்.

7 பேர் விடுதலை தொடர்பான  சட்டவிவகாரம்  இவ்வளவு நாள் தாமதபட்ட பின்னர் இப்பொது அவசரப்பட கூடாது எனவும், எது நியாயமான விஷயமோ, நேர்மையான விஷயமா அது கட்டாயம் நடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாக தெரிவித்த அவர், யாராக இருந்தாலும் நீதிமன்றத்தையும், காவல்துறையும் விமர்சிக்க கூடாது எனவும்  தெரிவித்தார். அதிமுகவினர் சப்பானி என படத்தின் கேரக்டரை சொல்லி பேசும் போது,அதற்கு பதிலுக்கு நாம் ஏதாவது  சொன்னால் வருத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

தேர்தல் போட்டியிடுவது குறித்து இந்த பயிலரங்கில் ஆலோசித்து வருவதாகவும், தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் சொல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு விட்டது என தெரிவித்த அவர்,

மாற்றம் மாற்றம் என பேசிக்கொண்டு இருக்காமல் மாற்றமாகவே செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர்,தலைமை செயலகத்தில் இருந்த ஊழல் சிறை வரை பரவி இருப்பதாகவும் தெரிவித்தார்.சினிமாவை பற்றி எதுவும் பேசாததால்  முழுமையான அரசியல்வாதியாக இருப்பதாகவும் கமலஹாசன் தெரிவித்தார்.