கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் – சுவடியியல் தேசியப் பயிலரங்கம்

       தஞ்சை தமிழ் பல்கலைக் கழக ஓலைச்சுவடி துறையும் , கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ் துறையும் இணைந்து நடத்தும் சுவடியியல் தேசிய பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு இந்த பயிலரங்கம் நடைபெறுகிறது. கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் ஆறுச்சாமி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர், கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியம், தமிழ்த்துறைத் தலைவர் முருகேசன், உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு உள்ளனர். முதல் நாள் பயிலரங்கத்தில் இன்று சிறப்பு விருந்தினராக தஞ்சை தமிழ்பல்கலைக் கழகத்தின் ஓலைச்சுவடித்துறையின் இணைபேராசிரியர் மற்றும் தலைவர் கோவைமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சுவடி குறித்தும், சுவடிப் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகள் , தமிழ்சுவடிகள் உள்ள எழுத்துக்களை படித்தல் மற்றும் படியெடுத்தல் உள்ளிட்டவைகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிரவையாதீனம், குருமகாசந்நிதானங்கள் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டார். நாளை பயிலரங்கத்தின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் மேனாள் முதல்வர் மனோன்மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த பயிலரங்கில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.