ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் உறுப்பு தான அறுவை சிகிச்சை

ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் (ஜி.கே.என்.எம்.), தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் சத்தியமூர்த்தி தலைமையில் வியாழக்கிழமை உறுப்பு தான அறுவை சிகிச்சை நடைபெற்றது.

மூளை சாவினால் 03.05.2023 அன்று இறந்த 48 வயதுடைய உறுப்பு கொடையாளரின் நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் போன்ற உறுப்புகள் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன், 6 பயனாளர்களுக்கு வாழ்வு அளிக்கும் வகையில் தானமாக வழங்கப்பட்டது. தமிழக அரசின் ட்ரான்ஸ்டன் (TRANSTAN) என்ற ஆணையத்தின் மேற்பார்வையில் உறுப்புகள் பகிரப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது.

ஒரு மனிதன் இறந்த பின்னும் வாழ முடியும் என்றால் அது உறுப்பு தானத்தால் மட்டுமே சாத்தியம், ஒரு உறுப்பு கொடையாளரினால், 6 பேர் வாழ்வு பெற்று உள்ளனர், மக்கள் இது போன்று உறுப்பு தானத்தில் விழிப்புணர்வுடன் இருந்தால், பலர் வாழ்வில் ஒளியேற்ற இயலும், என்று ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மருத்துவர் சத்தியமூர்த்தி கூறினார்.