இந்தியா, சீனாவுக்கு அளிக்கப்படும் மானியத்தினை நிறுத்த வேண்டும் –  டிரம்ப் அதிரடி!

இந்தியா,  சீனா போன்ற பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுக்கு உலக வர்த்தக அமைப்பு அளித்து வரும் மானியங்களை ரத்துச் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் ஃபார்கோ நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.சில நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்று வருவதாக நாம் கூறிவருகிறோம். அவற்றில் பல நாடுகள் இன்னும் முதிர்ச்சியடைந்த நிலையில் தான் நாம் அவர்களுக்கு மானியங்களை அளித்து வருகிறோம். இது பைத்தியக்கார தனமாக உள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் இந்த மானியங்கள் மூலம் வளர்ச்சி பெறுவதைக் கண்டு நாம் வியந்துகொண்டு இருக்கிறோம் என்கிறார் டிரம்ப்.மானியங்களைப் பெற்றுக்கொண்டு தங்களை வளரும் நாடுகள் என்று இந்தியா, சீனா போன்ற நாடுகள் கூறி வருகின்றனர் என்றார்.