கோவை மாநகர வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம், மின் விளக்குகள் பராமரித்தல், சாலைப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் கூட்டம்  நடைபெற்றது. இதில் அனைத்து அலுவலர்கள், பொறியாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள். மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (திட்டம்)ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் ஞானவேல், மற்றும் அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.