என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா

டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியின் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா புதன்கிழமையன்று கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.நல்ல ஜி.பழனிசாமி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். இதில் “சீர்மிகு சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது. ஆசிரியர்கள் நேர்மையுடனும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி காலத்தில் நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். மாணவரிடம் ஒழுக்கப்பண்புகள் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் கீதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “பயிற்சி ஆசிரியர்கள் தற்காலத் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ற கற்பித்தல் மற்றும் அதனுடைய நுணுக்கங்களை முறையாகக் கற்று கொண்டு வகுப்பறையில் பயன்படுத்த வேண்டும் எனவும், பாட அறிவு நல்லொழுக்கத்துடன் கூடிய ஆசிரியர்களாகவும் திகழ வேண்டும் என வாழ்த்தினார்.

இவ்விழாவில் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் தவமணிதேவி பழனிசாமி, அறங்காவலர் டாக்டர்.அருண் பழனிசாமி, தொழில் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் மதுரா பழனிசாமி, முதன்மை நிர்வாக அலுவலர் புவனேஸ்வரன் மற்றும் என்.ஜி.பி. கல்வி குழுமத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி முதல்வர்கள், புல முதன்மையர்கள் முதலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்கல்வியாண்டில் கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.