டாக்டர் ஆர்.வி.கல்லூரியில் ஆண்டு விழா

காரமடை, டாக்டர்.ஆர்.வி. கல்லூரியில் வெள்ளிகிழமை கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் அறங்காவலர் மற்றும் செயலர் சுந்தர் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா வரவேற்புரையாற்றினார்.

விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் நிகழ்வின் நிகழ்ச்சித்தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த், சூப்பர் சிங்கர் புகழ் வானதி ஸ்ரீ, விஜய் டி‌.வி.யின் ‘கலக்கப்போவது யாரு’  நிகழ்ச்சியின் நகைச்சுவை பிரபலங்களான யோகி மற்றும் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு திரைப்படப்  பாடல்கள் பாடியும்,’ நகைச்சுவைப் பேச்சாலும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் இடையே கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கல்லூரியின் அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.