கோவை மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.20 ஆயிரத்திற்கான வங்கி ஆணை

கோவை மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பார் நிதி (சுயசார்பு திட்டத்தின்கீழ் சாலையோர வியாபாரிகள் 10 நபர்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்திற்கான வங்கி ஆணையினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பயனாளர்களுக்கு புதன்கிழமை வழங்கினார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த், மாநகராட்சி துணை ஆணையாளர் சிவகுமார், நகர் நல அலுவலர் தாமோதரன், மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம் மற்றும் சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.