பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி விழா

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மாணவர் மன்றம் இணைந்து, பாலிடெக்னிக் கல்லூரி விழாவை புதன்கிழமை கொண்டாடியது.

இந்நிகழ்விற்கு கேரனோவ் மெடிக்கல் பிரைவேட் லிமிடெட்-ன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் கோவை தலைவர் மைக்கேல் ரோட்ரிக்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆண்டின் சிறந்த மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் விருதுகளை வழங்கினார். இந்நிகழ்வில் 37 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் வருமை கோட்டிக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு ரூ 20,000 முதல் 50,000 வரை உதவித்தொகையாக வழங்கப்பட்டது.