ஆசியாவின் டி.ஆர் ஜாக்கி சான் பற்றிய தகவல்

கடல், ரயில், யானை வரிசையில ஜாக்கிசான் ஆக்சன் காட்சிகளையும் எப்போ பார்த்தாலும் சலிக்காது. எல்லாரோட ஃபேவரிட்டா இருக்குற ஆசியாவின் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் பற்றி தெரிந்து கொள்ளலாம்

பிறந்த கதை

ஜாக்கிசான் பிறந்தப்போ ஆபரேசன் பண்ண டாக்டருக்கு கொடுக்க அவங்க அப்பாகிட்ட பணம் இல்லையாம். அந்த டாக்டர் ‘1000 ரூபா தர்றேன். இந்த குழந்தையை எனக்கு கொடுத்திடுறீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். ஆனால் அவருடைய பெற்றோர் மறுத்துவிட்டனர். ஜாக்கிசானோட அப்பா சார்லஸ், சைனீஸ் ஆர்மில சீக்ரெட் ஸ்பையா இருந்தவர். அவங்க அம்மா போதைப் பொருள் வித்துட்டு இருந்தவங்க. சொல்லப்போனா அவங்களை கைது பண்ண போனப்போதான் சார்லஸ் அவங்களை மீட் பண்ணிருக்காரு. இந்த உண்மையெல்லாம் ஜாக்கிசானுக்கு ரொம்ப லேட்டாதான் தெரிஞ்சதாம்….

சண்டைக்காரர் மட்டும் இல்லை பாடகரும்

டிஸ்யூம் டிஸ்யூம்னு ஃபைட் பண்ற ஜாக்கிசான்தான் நம்ம ஃபேவரிட். ஆனா அவர் ஒரு பாடகரும்கூட. கிட்டத்தட்ட 100 பாடல்களுக்கு மேல பாடிருக்காரு. போலீஸ் ஸ்டோரி படத்துல ஹீரோ ஸ்டோரி அப்படிங்குற தீம் சாங் பாடிருப்பாரு. ஹாங்காங் போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்குறதுக்கான விளம்பரங்கள்ல இந்தப் பாட்டைதான் பயன்படுத்துறாங்க.

 ஆசியாவின் டி.ஆர்

ஜாக்கிசானை அந்த ஊரு டி.ராஜேந்தர்னு சொல்லலாம். ஒரு படத்துல நடிக்கிறது, பாடுறது மட்டுமல்ல டைரக்டர், ப்ரொடியூசர்னு எல்லா வேலையும் பார்ப்பாரு.

ஜாக்கிசான் இரண்டு முறை கின்னஸில் இடம்பிடித்திருக்கிறார்.அதில் ஒன்று சைனீஸ் ஜோடியாக் படத்தில் 15 வேலைகள் பார்த்து அதிக கிரிடிட் ஒரு படத்தில் இடம்பெற்றது கின்னஸ் சாதனையானது.

பங்குபெற்ற தமிழ் மேடை.

தசாவதாரம் ஆடியோ லாஞ்ச்சில் கலந்துகொண்டதுதான் ஜாக்கிசான் பங்குபெற்ற ஒரே தமிழ் மேடை.  தமிழில் வணக்கம் சொல்லி ஆரம்பித்தது, அவருடைய ஒவ்வொரு பேச்சுக்கும் மக்கள் மனதில் பதிந்தார். கமலை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று சொன்னவர் ‘ஒருநாள் நாம சேர்ந்து நடிப்போம்’ என்றும் சொன்னார். அதையெல்லாம் விட ஹைலைட், ஆடியோ லாஞ்ச் முடிந்ததும் கீழே கிடந்த பேப்பர்களை தானே அள்ளி எடுத்துப் போய் ஓரமாகப் போட ஒட்டுமொத்த க்ரவுடும் ஜாக்கிசானின் அந்த செயலுக்கு ஆர்ப்பரித்தது.

சொத்துக்களை தானமாக்கிய ஜாக்கி

ஜாக்கிசானோட சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2800 கோடி இருக்கலாம்னு சொல்லப்படுது. ஆனா இந்த சொத்து எதுவுமே அவரோட பையன் ஜெய்சி சானுக்கு போகாது. மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு தானமா கொடுத்திருக்காரு ஜாக்கி. என் மகனுக்கு திறமை இருந்தா அவனே சம்பாதிக்கட்டும். என் சொத்தைக் கொடுத்தா சோம்பேறி ஆகிடுவான்னு சொல்லிருக்காரு ஜாக்கிசான்.

 9 மணி நேரம் ஆங்கிலம் 

சைனீஸ் படங்களில் ஹிட் கொடுத்துவிட்டு 80-களில் ஹாலிவுட்டுக்கு வந்தபோது ஜாக்கிசானுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. அதனால் நிறையவே சிரமப்பட்டிருக்கிறார். இனி இங்கிலீஸ் கத்துக்கிட்டாதான் பொழைப்பு ஓட்ட முடியும் என்று முடிவு செய்து நான்கு இங்கிலீஸ் டீச்சர்ஸ் வைத்து ஒருநாளைக்கு 9 மணி நேரம் செலவிட்டு ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.

ஆஸ்கர் விருது  மீது காதல்

ஆஸ்கர் விருது மேடையில் ஜாக்கிசான் பேசியது எல்லாரையும் நெகிழ வைத்தது. ஆஸ்கர் விருது மீது ஜாக்கிசானுக்கு தீராத காதல் இருந்தது. ஆனால் நாம எடுக்கிற காமெடி ஆக்சன் மூவிக்கெல்லாம் எப்படி விருது கொடுப்பாங்கனு நினைச்சிருக்காரு. ஒருநாள் ஆஸ்கர் கமிட்டியில் இருந்து ஜாக்கிக்கு ஒரு போன் வந்தது. படபடவென்று ஆங்கிலத்தில் பேசியது அவருக்கு புரியவில்லை. உங்களுக்கு ஆஸ்கர் விருது தர்றோம்னு அவங்க சொன்னதை, நாம யாருக்கோ அவார்டு கொடுக்கணும் போல என்று நினைத்திருக்கிறார். பிறகு டிவியில் அறிவிப்பு வந்த பிறகுதான் தனக்கு ஆஸ்கர் என்பதை தெரிந்திருக்கிறார். அப்பவும் ‘நான் இந்த வருசம் எந்த படத்துலயும் நடிக்கலையே, எதுக்கு அவார்டு’ என்று குழம்பியவரிடம் Lifetime Achievement Award என்று விளக்கியிருக்கிறார்கள்.

டூப் இல்லை

ஜாக்கிசானுக்கு டூப் கிடையாது எல்லா ஸ்டண்டையும் அவரேதான் செய்வார் என்பதால் அவர் உடலில் அடிபடாத இடங்களே கிடையாது. போலீஸ் ஸ்டோரி 2  படத்தில் போலி கண்ணாடி சுவருக்கு பதிலா ஒரிஜினல் கண்ணாடி சுவரில் மோதி உடைத்து முகமெல்லாம் ரத்தக்களரியானது. ப்ராஜக்ட் ஏ என்ற படத்தில் ஆறு மாடிக் கட்டிடத்தில் இருந்து குதிக்கவேண்டும். மூன்று ஷாட் எடுக்க மூன்று முறையும் ஒரிஜினலாகக் குதித்து தலையில் அடிவாங்கியிருக்கிறார். ஒரு மனுஷனுக்கு ஹெலிகாப்டர் மோதி ஆக்ஸிடெண்ட் ஆகுமா அதுவும் ஜாக்கிக்கு நடந்திருக்கிறது.  போலீஸ் ஸ்டோரி 3 படத்தில் ஹெலிகாப்டர் தாக்கி ஷோல்டர் உடைந்தது. மருத்துவக்குழு வரும்வரை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார் ஜாக்கி.