என்.ஜி.பி கல்லூரியின் 15வது ஆண்டு விழா

இந்நிகழ்விற்கு இந்திய அரசு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் துணை இயக்குநர் பாலகிருஷ்ணா இஸ்லாவத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் நிகழ்வில் பேசுகையில், மாணவர்களையும், ஆசிரியர்களையும் சிறந்த ஆராய்ச்சியாளர்கள் ஆவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் தகவல்களுடன் அவசியத்தை வலியுறுத்தினார். அரசு மற்றும் பொதுத் துறைகளில் கிடைக்கும் ஏராளமான நிதி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து பார்வையாளர்களுக்கு புதுப்பித்தார்.

அதற்குமுன் நிகழ்வின் தொடக்கத்தில், கல்லூரி முதல்வர் பிரபா, கல்வியாண்டுக்கான ஆண்டறிக்கையை வாசித்தார். கே.எம்.சி.எச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி, செயலாளர் டாக்டர் தவமணி டி.பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள். அறங்காவலர் டாக்டர் அருண் என்.பழனிசாமி தலைமை வகித்தார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெகநாதன், தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தனர்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டது. சுமார் 325 உறுப்பினர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ஊக்க தொகைகள் மூலம் பாராட்டப்பட்டனர்.